சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்".. ஜெயக்குமார் அழைப்பு

துரைமுருகன் அதிமுக வந்தால் நல்ல முடிவு எடுப்போம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும்... அதிமுக ஒரு ஆலமரம்; திமுகவின் அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. துரைமுருகன் அதிமுக வந்தால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம்" என்று அமைச்சர் ஜெயக்குமார் திமுக மூத்த தலைவர் துரைமுருகனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, "எம்ஜிஆர் கூப்பிட்டே போகாதவர், ஜெயக்குமார் கூப்பிட்டவுடன் துரைமுருகன் அதிமுகவுக்கு சென்றுவிடுவாரா என்ன" என்று உடன்பிறப்புகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவிக்கு பொருளாளராக இருந்த துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்று முன்பே செய்திகள் வெளியானது... பொருளாளர் பதவியையும் துரைமுருகன் ராஜினாமா செய்திருந்தார்.. இந்த சமயத்தில்தான் கொரோனா பிரச்சனை வந்துவிட்டது. .. லாக்டவுன் அமலானது.

இதனால் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.. இதனிடையே, துரைமுருகன் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு முக ஸ்டாலினின் குடும்பத்துக்குள் எதிர்ப்பு எழுவதாகவும் செய்திகள் கசிந்தது.

நல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்நல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்

 துரைமுருகன்

துரைமுருகன்

பொருளாளர் பதவியில் மீண்டும் துரைமுருகனே தொடருவார் என்ற அறிவிப்பும் வந்தது.. இப்படிதான் இந்த 3 மாத கால திமுகவின் செயல்பாடுகள் நகர்ந்து வருகின்றன. இந்த சமயத்தில்தான், யார் கிளப்பி விட்ட வேலை என தெரியவில்லை.. துரைமுருகன் அதிருப்தியில் இருக்கிறார்.. துரைமுருகன் கட்சி மாற போகிறார் என்றெல்லாம் 2 நாளாக திமுகவுக்கு எதிரான செய்திகள் வந்த வண்ணம் இருந்த

 திமுக வட்டாரம்

திமுக வட்டாரம்

கு.க.செல்வம் போன்று துரைமுருகனும் முக்கிய முடிவு எடுப்பார் என்று ஒரு நாளிதழ் செய்தியைவிட, உண்மையிலேயே திமுக வட்டாரம் கிறுகிறுத்தது.. இதையடுத்து, கொந்தளித்து ஒரு அறிக்கை விட்டார் துரைமுருகன், கொள்கை பார்த்து ஒரு போராளியாக 1953 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இரு வண்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்" என்று விளக்கம் தந்தார்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

இவ்வளவு பெரிய விளக்கம் தந்தும் அதிமுக தரப்பு இந்த விவகாரத்தை விடவில்லை போல தெரிகிறது.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும்... அதிமுக ஒரு ஆலமரம்; திமுகவின் அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. துரைமுருகன் அதிமுக வந்தால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம்.. அதிருப்தியில் உள்ள திமுகவினர் யார் வந்தாலும் அதிமுக நிழல் கொடுக்கும்" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தினகரன்

தினகரன்

சசிகலா, தினகரனை கட்சிக்குள் சேர்க்கவே மாட்டோம் என்று 3 வருஷமாக பிடிவாதம் காட்டி வருபவர் ஜெயக்குமார்.. ரஜினி, கமல் பற்றி கருத்து கேட்கப்படும்போதெல்லாம், அதற்கு எதிராக கருத்தை சொல்லி வருபவர் ஜெயக்குமார்.. இந்நிலையில், அவர் துரைமுருகனுக்கு அழைப்பு விடுத்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

ஒரு பக்கம் முதலமைச்சர் பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுக வந்தால் வரவேற்போம் என்கிறார்.. இப்போது ஜெயக்குமார் துரைமுருகனை அழைக்கிறார்.. அப்படியென்றால் அதிமுகவின் பலம் குன்றிவருகிறதா? என்பது தெரியவில்லை. அதேசமயம், துரைமுருகனை பொறுத்தவரை எல்லாருக்கும் பிடித்தமானவர்.. மனசில் எதையும் வைத்துகொள்ள மாட்டார்.. இவரது பேச்சுக்கு சட்டசபையில் தனி ரசிகர் கூட்டமே இருக்கும்.

அழைப்பு

அழைப்பு

துரைமுருகன் சட்டசபையில் பேசினால் கட்சி பேதமின்றி அனைவரும் மனசு விட்டு சிரிப்பார்கள்.. யாரையும் நோகடித்து பேசியதில்லை. மேலும் திமுகவில் இப்போதுள்ள மூத்த தலைவரும்கூட! ஆரம்பத்தில் இருந்தே எம்ஜிஆர் இவரை நேரடியாக கட்சிக்கு கூப்பிட்டும் வராத துரைமுருகன், இப்போது அதிமுகவுக்கு செல்வாரா என்பது சந்தேகம்தான்.. எம்ஜிஆர் கூப்பிட்ட செல்லாதவர் ஜெயக்குமார் கூப்பிட்டு செல்ல மாட்டார் என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.

 திமுக தலைமை

திமுக தலைமை

எனினும் பொதுச்செயலாளர் பதவி இல்லாததால் உண்மையிலேயே அதிருப்தியில் துரைமுருகன் இருக்கிறாரா தெரியவில்லை. ஏற்கனவே அந்த பதவிக்கு நான்கைந்து பேர் போட்டியில் உள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரை திமுக பயன்படுத்தி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
minister jayakumar says about dmk treasurer durai murugan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X