சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: புருஷன் - பொண்டாட்டி போல இருந்தோம்... ஆனா காலத்தின் கட்டாயம் இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த புத்தாண்டு முதல் பிளாஸ்டிக்கை உபயோகிக்க கூடாது என்று அரசு உத்தரவு போட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஹைகோர்ட்டில் கேஸ் போடப்பட்டது.

Minister Jayakumar says about Plastic Issue

ஆனால் இதனை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அத்துடன் எல்லா வகை பிளாஸ்டிக்குக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார். அப்போது, "எத்தனையோ வருஷங்களாக மனிதனோடு ஒன்றி இருந்ததுதான் பிளாஸ்டிக். மக்களும், பிளாஸ்டிக்கும் கிட்டத்தட்ட கணவன் - மனைவி போல இருந்தார்கள். காலத்தின் கட்டாயம் டைவர்ஸ் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

ஆனால் அரசு எல்லா பிளாஸ்டிக்கையும் ஒழிக்க சொல்லியுள்ளது உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். அதனை அரசு கண்டிப்பாக ஆராயும். அதே சமயத்தில் எல்லா வகை பிளாஸ்டிக்கிற்கும் முழுமையாக தடை விதிப்பது என்பது ஒரே நாளில் சாத்தியம் கிடையாது" என்றார்.

English summary
Minister Jayakumar talks on Plastic Issue and he Says, that Plastics and Peoples are husband wives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X