சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆள்மாறாட்டத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததே கமல்தான்.. அமைச்சர் ஜெயக்குமார் பலே!

Google Oneindia Tamil News

சென்னை: ஆள்மாறாட்டத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததே கமல்ஹாசன்தான் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் அரசியல் பேசுவதிலிருந்து மாணவர்கள் விலகியிருக்க கூடாது.

எல்லாவற்றையும் கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் நினைக்க கூடாது. அவ்வாறு நினைத்ததால்தான் அரசியலில் கறை ஏற்பட்டுவிட்டது.

பன்முகத்தன்மை

பன்முகத்தன்மை

மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.

சின்ன பசங்க

சின்ன பசங்க

தமிழக அரசியலில் இருந்து குடும்ப அரசியலை பிரிக்க முடியாது. ஆனால் குடும்பத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இதுதான் என் குடும்பம் (மாணவர்களை பார்த்து). நான் ஏதோ சின்ன பசங்களுடன் பேசி வருகிறேன் என கருத வேண்டாம்.

இன்ஸ்டன்ட் சாம்பார்

இன்ஸ்டன்ட் சாம்பார்

நான் பேசிக் கொண்டிருப்பது நாளைய தலைவர்களுடன் என்றார் கமல்ஹாசன். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட் மாதிரி திடீரென கருத்து கூறுவார்.

 கலாச்சார சீரழிவு

கலாச்சார சீரழிவு

பின்னர் காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீடே அலிபாபா குகை போல் உள்ளது.

திருடனாய்

திருடனாய்

வீட்டில் இருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகிறார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் தடை கோர முடியுமா என கேட்கிறீர்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

திரைப்படம்

திரைப்படம்

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை கற்றுக் கொடுத்ததே கமல்தானே. இப்படித்தான் வாட்ஸ் ஆப்களில் உலா வருகிறது. கல்லூரி மாணவர்கள் மத்தியில் கமல் அரசியல் பேசுவது தவறு என்றார் ஜெயக்குமார்.

English summary
Minister Jayakumar says that Kamal Haasan thought how to impersonate in Exams by his film Vassolraja MBBS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X