சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன்?.. தர்மசங்கடத்தில் எடப்பாடி!- வீடியோ

    சென்னை: எதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    தினகரன் கட்சியிலிருந்து விலகி திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தார். அப்போதிலிருந்தே தங்கதமிழ்ச் செல்வனும் திமுகவில் இணைவார் என்ற பேச்சு அடிப்பட்டது.

    இந்த நிலையில் அந்த தகவலை மறுத்தார். இதைத் தொடர்ந்து அமமுகவிலிருந்தபடியே நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். ஆனால் தேனி எம்பி தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை சந்தித்தார்.

    திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்! திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்!

    பிரச்சினை

    பிரச்சினை

    அமமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் டிடிவி தினகரனுடன் செல்வதை தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் நிறுத்திவிட்டனர். இதிலிருந்து தினகரனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது.

    தங்கதமிழ்ச் செல்வன்

    தங்கதமிழ்ச் செல்வன்

    இந்த நிலையில் உள்ளுக்குள்ளேயே இருந்த மோதல் நேற்று முன் தினம் முதல் வெளியே வந்தது. தினகரனை தங்கதமிழ்ச் செல்வன் கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோ வெளியானது. இதனால் கோபம் அடைந்த தினகரன் விரைவில் தங்கதமிழ்ச் செல்வன் நீக்கப்படுவார் என்றார்.

    மரியாதை

    மரியாதை

    மேலும் தங்கதமிழ்ச் செல்வனை அதிமுகவுக்கு அழைத்துச் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தினகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாபொ சிவஞானத்தின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமார் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அமமுக

    அமமுக

    அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீறுகின்றனர். தினகரன் கட்சியில் உள்ள 4 பேரும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    நாமம்

    நாமம்

    தினகரன் அணியினரை கட்சியில் சேர்க்க கட்சி தலைமை முடிவு செய்யும். கொள்கை, கோட்பாடு, லட்சியம் ஆகிய மூன்றும் இல்லாத அமமுகவுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்.

    நிரந்தர நண்பரும் இல்லை

    நிரந்தர நண்பரும் இல்லை

    தங்கதமிழ்ச் செல்வன் உள்பட யாரையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. தினகரன் அணியினர் அதிமுகவில் சேர எந்த முட்டுக்கட்டையும் இல்லை. தங்கதமிழ்ச் செல்வனை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்றார். தங்கதமிழ்ச் செல்வனை அதிமுகவில் இணைத்து கொள்ள ஒரு தரப்பு ஆட்சேபம் தெரிவிக்கிறது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Minister Jayakumar says that AIADMK chief will decide about Thanga Tamil selvan's entry. He also criticises about TTV Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X