சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்திருந்தது நல்ல கருத்து.. வரவேற்கிறேன்.. அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்து ரஜினி பேசிய வசனங்கள் நல்ல கருத்துகள். அதை நான் வரவேற்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில் பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேருக்கு தினசரி வழங்கப்படுகிறது பொதுமக்கள் காலையிலேயே வர வேண்டாம்.

தர்பார் கருத்துகள்

தர்பார் கருத்துகள்

இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள். பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தர்பார் படத்தில் உள்ள கருத்துக்களை நானும் கேள்விப்பட்டேன்.

மத்திய அரசை எதிர்க்க தமிழக அரசுக்கு தில் இல்லை... துரைமுருகன் பொளேர்மத்திய அரசை எதிர்க்க தமிழக அரசுக்கு தில் இல்லை... துரைமுருகன் பொளேர்

சிறைக் கைதி

சிறைக் கைதி

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் பணம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. அதாவது காசு இருந்தால் சிறைக் கைதி கூட ஷாப்பிங் செல்லலாம் என தர்பாரில் வசனம் உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்துதான்.

பிகில் படம்

பிகில் படம்

இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன். இது நல்ல கருத்து. இதற்குமேல் இதை பற்றி கூற விரும்பவில்லை. தர்பார் படத்தையும் பிகில் படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.

Recommended Video

    Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh
    இரண்டும் ஒன்றுதான்

    இரண்டும் ஒன்றுதான்

    அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு காட்சிகள் திரையிட அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான் எனக் கூறினார் ஜெயக்குமார்.

    English summary
    Minister Jayakumar says that Darbar's dialogue about Sasikala is welcomable and its good point.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X