• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுகவிற்கு 30 ஆண்டுகளுக்கு கிரகணம் பிடித்துள்ளது.. அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்!

|
  திமுகவிற்கு 30 ஆண்டுகளுக்கு கிரகணம் பிடித்துள்ளது.. அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்!

  சென்னை: திமுகவிற்கு 30 ஆண்டுகளுக்கு கிரகணம் பிடித்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  காசிமேடு கடற்கரையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக சார்பில் அமைச்சர் டி. ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் நா. பாலகங்கா ஆகியோர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உயிர் நீத்தவர்கள் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து படகில் சென்று கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

  அதன் பின்பு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: சுனாமி பேரழிவிற்கு பின் ஜெயலலிதா தீவிரமான நடவடிக்கை எடுத்ததால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்கள் வாழ்வை மேற்கொள்ள வழி செய்துள்ளனர். தமிழக அரசுக்கு சுனாமிக்கு பின் நீண்ட படிப்பினை தந்துள்ளது. அதனால்தான் அதற்கு பின்பு புயல்களையெல்லாம் எங்களால் எளிதாக சமாளிக்க முடிந்தது.

  மத்திய அரசு

  மத்திய அரசு

  மத்திய அரசில் நாங்கள் பங்கு வகிக்கவில்லை. ஆனால் கூட்டணியில் இருக்கிறோம். இசைவாக உள்ளோம். இதனால் மீன்வளத் துறைக்கு 453 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். இதுவே நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருந்ததற்கு சிறப்பான உதாரணம்.

  திட்டம் தயார் செய்த தமிழகம்

  திட்டம் தயார் செய்த தமிழகம்

  மத்திய அரசு மீன்வளத்துறை கட்டமைப்பிற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் எந்த மாநிலமும் அதற்காகத் திட்டம் தயார் செய்து கொடுக்கவில்லை. திட்டம் தயார் செய்து கொடுத்த ஒரே மாநிலம் தமிழகம். அதற்காக ரூபாய் 1000 கோடி மீன்வளத்துறை கட்டமைப்புகாக ஒதுக்கப்பட்டுள்ளது.

  தமிழகம்

  தமிழகம்

  இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோல் திட்டங்களை தரவில்லை தமிழகம் மட்டுமே கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் பாராட்டியுள்ளார். திமுகவினர் 13 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தனர். தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டம் எதையும் தரவில்லை.

  தேர்தல்

  தேர்தல்

  ஆனால் நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால் இது போன்று நடக்கிறது. மத்திய அரசு ஊரக உள்ளாட்சிகளுக்கு தர வேண்டிய பணத்தில் பாதி பணம் தந்துள்ளது. இப்போது நாம் தேர்தலை நடத்தி உள்ளதால் மீதி பணத்தை தருவார்கள். குடியுரிமை பற்றி குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி மத்திய உள்துறை அமைச்சர் தெளிவாக விளக்கிய பின்பும் ஸ்டாலின் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறார். இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

  மனித சக்தி

  மனித சக்தி

  ஸ்டாலின் பேரணிக்கு 50,000 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து நாங்கள் 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தோம். ஆனால் அங்கு மிக குறைவாகவே 5000 முதல் 8000 பேர் பேரணியில் வந்துள்ளனர். போலீஸின் மனித சக்தியை அவர்கள் வீண் அடித்து விட்டனர்.

  இரட்டைக் குடியுரிமை

  இரட்டைக் குடியுரிமை

  தற்போது இருக்கும் திமுகவை பாதித்துள்ளது. இதன் தாக்கம் திமுகவிற்கு 30 ஆண்டுகளுக்கு இருக்கும். இலங்கை தமிழர்களுக்கு என்ன திட்டம் வேண்டும் என்பதை தெளிவாக ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இரட்டைக் குடியுரிமைதான் அவர்களுக்கு சரியானதாக இருக்கும்.

  பேரணி

  பேரணி

  ஏனென்றால் அவர்களுக்கு இலங்கையிலும் சொத்துக்கள் உள்ளன. இங்கு நாம் குடியுரிமை கொடுத்து விட்டால் அங்குள்ள சொத்துக்கள் அவர்கள் அனுபவிக்க முடியாது. அதை பெற முடியாமல் போய்விடும். கனடாவில் கூட அவர்களுக்கு குடியுரிமை கொடுத்தபோது அதை வேண்டாம் என அவர்கள் தெளிவாக கூறி விட்டனர். இரட்டை குடியுரிமை பெற நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இலங்கை தமிழர்களுக்காக பேரணி நடத்தி போலியான நாடகத்தை ஸ்டாலினும் எதிர்க்கட்சியினரும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  வருமான வரித் துறை

  வருமான வரித் துறை

  ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் 1900 கோடி சசிகலா தினகரன் கும்பல் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டபோது சுருட்டியதை இப்போது வருமான வரித்துறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதை வருமான வரித்துறையினர் பார்த்துக்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.

   
   
   
  English summary
  Minister Jayakumar says that Eclipse happens for DMK for the next 30 years. We will definitely get twin citizenship for Srilankan tamils.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X