சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. ஆனால் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

    சென்னை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருக்கிறார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள புதிய தனியார் மருத்துவமனையினை திறந்து வைத்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் : இந்திய அளவில் ஒப்பிடும் போது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகை புரிந்து சிகிச்சை பெரும் வகையில் தரமான சிகிச்சையானது தமிழக அரசும் சுகாதாரத் துறையும் அளித்து வருகிறது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    வருகின்ற 18ம் தேதி அன்று டெல்லியில் ஜிஎஸ்டி கூட்டமானது நடைபெற உள்ளது. அரசின் கருத்துகளை அப்போது நிச்சயமாக தெரிவிப்போம்.மாநிலத்தின் நலன் என்ற அடிப்படையில்தான் பல்வேறு வரி விலக்குகளும் வரி குறைப்புகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.

    பெரும் சவால்

    பெரும் சவால்

    தமிழகத்தில் ஜிஎஸ்டி பெரும் சவாலாக இருந்த நிலையில் வர்த்தகர்கள், வணிகர்கள் இவர்களின் எல்லோரின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக சிறு குறு தொழில் பணிகள் அவர்கள் எல்லாமே திருப்திப்படும் வகையில் நாங்கள் செய்துள்ளோம்.

    கருத்துகள்

    கருத்துகள்

    அதனால் செய்தித்தாள்களில் வரும் கருத்துக்களை வைத்து நான் பதில் சொல்ல முடியாது. 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தின் அடிப்படையில் செயல்திட்டம் வந்தபிறகு அரசின் கருத்துகள் தெரிவிக்கப்படும்.

    தகுதியற்றவர்கள்

    தகுதியற்றவர்கள்

    தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் செயலானது மனித உரிமை மீறல் என திமுக எம்பி கூறியது கண்டனத்துக்குரியது.
    கொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை எல்லாம் என்கவுன்ட்டர் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

    அரசு நல்ல விஷயம்

    அரசு நல்ல விஷயம்

    இதைப் போன்ற செயல்கள் மூலமாகவே குற்றங்கள் தடுக்கப்படும். எனவே அவரின் கருத்தானது பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கருத்து. தெலுங்கானா அரசு நல்ல விஷயத்தை செய்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.

    திமுக தயார் இல்லை

    திமுக தயார் இல்லை

    உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையம் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் தேதியினை விரைவில் அறிவிக்கும். ஆனால் அறிவிப்பு வெளியிடும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தோஷப்படுவதாக காட்டினாலும் அவர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே அழுகின்றார் ஸ்டாலின் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

    English summary
    Minister Jayakumar says that Stalin is laughing and crying as he has no brave to face Civic Polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X