சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு.. அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவிரிப் படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கி உள்ளன.

Minister Jayakumar says that TN government will allow only people interest projects

இவற்றில் 67 இடங்களில் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை காவிரி படுகையில் எடுக்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்த நிலையில் காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கூலிங் கிளாஸ், டி சர்ட், கோட்டுடன் பீர் பாட்டில் லேபிளில் காந்தியின் படம்.. கொந்தளித்த இந்தியர்கள் கூலிங் கிளாஸ், டி சர்ட், கோட்டுடன் பீர் பாட்டில் லேபிளில் காந்தியின் படம்.. கொந்தளித்த இந்தியர்கள்

இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே தமிழக அரசு ஆதரவு அளிக்கும். இதை முதல்வரே கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம். தனி மரம் தோப்பாகாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

English summary
Minister Jayakumar says that TN government will allow only people interest projects. He also criticises TTV Dinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X