சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலேஜ் எலெக்ஷன்.. எப்படி யோச்சிருக்காரு பாருங்க ஜெயக்குமார்.. அட தலையில ஏகப்பட்ட முடி வேற!

Google Oneindia Tamil News

Recommended Video

    மலரும் நினைவினையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

    சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இன்று முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அதிமுக அரசின் செய்தி தொடர்பாளர் போல் ஒவ்வொரு விஷயங்களும் ஜெயக்குமார் தான் பதில் அளித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்திலேயே தேர்தலில் வித்தியாசமாக சிந்தித்து நோட்டீஸ் அடித்து அசரடித்துள்ளார். தனது மலரும் நினைவினையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அமைச்சர் ஜெயக்குமார் 1991ம்ஆண்டு ராயபுரம் தொகுதியில் முதல்முதலாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2001ம்ஆண்டு , 2006ம் ஆண்டு. 2011ம் ஆண்டு, 2016ம் ஆண்டும் ராயபுரம் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். ஜெயக்குமாருக்கு தற்போது 58 வயதாகிறது. சென்னை தியாகராயா கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் பட்டம் பெற்றவர் ஆவார்.

    கல்லூரி தேர்தலில் ஜெயக்குமார்

    கல்லூரி தேர்தலில் ஜெயக்குமார்

    இவர் 1977 மற்றும் 78ம் ஆண்டுகளில் தியகராய கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது, கல்லூரியில் நடந்த மாணவர் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.அப்போது ஜெயக்குமார் தான் அடித்த தேர்தல் விளம்பர நோட்டீஸை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    ஆச்சர்ய நோட்டீஸ்

    அந்த நோட்டீஸ் நிச்சயம் பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கும். ஏனெனில் அதில் தனது பெயர் வருவது போல் வித்தியாசமான கருத்துக்களோடு நோட்டீஸ் அடித்துள்ளார்.அதில் "தைரியமாக செயல்படுவேன் ஆனால் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்த மாட்டேன். கொஞ்சமும் சூழ்ச்சி செய்ய மாட்டேன். செயல்படுவேன் ஆனேன் வலுச்சண்டைக்கு போக மாட்டேன்.

    உரிமைகளை காப்பேன்

    உரிமைகளை காப்பேன்

    நான் உங்களுக்கு சேவை செய்பவனாக இருப்பேன். ஆனால் அடிமையாக இருக்க மாட்டேன். அதிகாரம் இருக்கும் ஆனால் சர்வாதிகாரம் இருக்காது. அன்பாக மற்றும் திறந்த மனதோடு இருப்பேன் ஆனால் புதிராக இருக்க மாட்டேன். உரிமைகளை காப்பவனாக இருப்பேன், ஆனால் அதில் அரசியல் செய்ய மாட்டேன். ஒழுக்கத்தை போற்றுபவனாக இருப்பேன். ஆனால் பிரச்னைகளை உருவாக்குபவனாக இருக்கமாட்டேன். சுமூகமாக செயல்படுவேன், ஆனால் நிர்பந்திக்க மாட்டேன். அனைவருக்கும் நண்பரான இருப்பேன். ஆனால் யாருக்கும் எதிராக இருக்க மாட்டேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

    பெயரே வருது

    பெயரே வருது

    இந்த கருத்தின் ஆங்கிலத்தின் படி பார்த்தால் டி ஜெயக்குமாரின் ஜெனரல் எஸ்இஒ என்று வரும். இநத பதிவினை சமூக வலைதளத்தில் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார் .இதை பார்த்த பலரும் அமைச்சர் ஜெயக்குமாரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் அப்பவே அப்படி, அதனால் தான் 6முறை ராயபுரம் தொகுதியில் எம்எல்ஏ ஆகி உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் பாராட்டி உள்ளனர்.

    English summary
    minister jayakumar sharing old memory, contesting for students union Gen.secretary election in chennai thiyagarya college 1977-78
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X