சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏ.. தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு.. அமைச்சர் அதகளம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏ... பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

    சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏவிடம் தெலுங்கு தெரியாது தமிழில் பேசுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் கலந்த தெலுங்கில் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் பேசிய தளி தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ் தொகுதி பிரச்சனைகளை பட்டியலிட்டார்.

    தொடக்கத்தில் தமிழ், பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு என கலந்து பேசிய எம்எல்ஏ பிரகாஷ் ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க தெலுங்கிலேயே பேச ஆரம்பித்தார். இதனால் அவையில் இருந்தவர்கள் என்ன சொல்கிறார் என புரியாமல் இருந்தனர்.

     நீ தான் காரணம், நான் இல்லை நீ தான்.. நீட்டை வைத்து ரொம்ப நீட்டா பண்றாங்கப்பா அரசியல்! நீ தான் காரணம், நான் இல்லை நீ தான்.. நீட்டை வைத்து ரொம்ப நீட்டா பண்றாங்கப்பா அரசியல்!

    தமிழில் பேசுங்கள்

    தமிழில் பேசுங்கள்

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் மொழிமாற்றம் செய்யும் வசதி சட்டசபையில் இல்லை. ஆகையால் நீங்கள் தமிழில் பேசுங்கள். நீங்கள் தெலுங்கில் பேசுவது அவைக்குறிப்பில் பதிவாகாது என்றார்.

    அமைச்சர் பதில்

    அமைச்சர் பதில்

    ஆனாலும் திமுக எம்எல்ஏ பிரகாஷ் தொடர்ந்து தெலுங்கிலேயே பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பல மொழிகள் தெரியும். ஆனால் எங்களுக்கு தெரியாது என்றார்.

    தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு

    தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு

    மேலும் தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு என்றும் தனக்கு தெரிந்த தெலுங்கில் திமுக எம்எல்ஏ பிரகாஷிடம் கூறினார். அமைச்சர் தெலுங்கு கலந்த தமிழில் பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    தெலுங்கில் பதிலளித்த ஜெயலலிதா

    தெலுங்கில் பதிலளித்த ஜெயலலிதா

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பேசுவதில் வல்லவர். கேள்வி கேட்கும் மொழியிலேயே பதிலளித்து அசத்துவார். கடந்த சட்டசபையில் ஓசூர் எம்எல்ஏவாக இருந்த கோபிநாத் தெலுங்கில் பேசும் போதெல்லாம் ஜெயலலிதா தெலுங்கில் பதிலளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Minister Jayakumar talks in Telungu to DMK MLA Prakash in Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X