சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கல்வி கொள்கை குறித்து என்ன தெரியும்.. அரைவேக்காட்டுத்தனமாக பேசிய சூர்யா .. அமைச்சர் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து ஒன்றுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் சூர்யா என அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அப்போது அவர் பேசுகையில் மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள்.

Minister Kadambur Raju says that he slams Actor Surya for New Education Policy

எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார்.

இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சூர்யாவின் கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

1984-ல் இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வருபவர் உதயநிதி... 'அடேங்கப்பா' அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1984-ல் இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வருபவர் உதயநிதி... 'அடேங்கப்பா' அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அவர் கூறுகையில் புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால் எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்?

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார். அரசுப் பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்து இல்லாமலும் அதன் எண்ணிக்கை குறையாமல் அரசு பார்த்து கொள்ளும். 10 சதவீதம் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராத வகையில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றார்.

English summary
Minister Kadambur Raju says that Surya's comment on New Education policy is half baked one. He doesnt know about that policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X