சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நவம்பர் வருதா? பயப்பட வேண்டாம் சென்னை மக்களே..எல்லாமே ரெடி! அமைச்சர் கே.என்.நேரு சொன்ன குட் நியூஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நவம்பர் டிசம்பர் மாதம் வந்தாலே போதும் சென்னை மக்கள் ஒருவித அச்சத்துடனே தான் வாழ வேண்டிய நிலை கடந்த ஆண்டுகளில் இருந்தது. காரணம் வடகிழக்கு பருவமழை தான்.

தென் மாவட்டங்களில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தலைநகரான சென்னையில் மழை பெய்தாலே மக்கள் ஒருவித அச்ச உணர்வு உடனையே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. காரணம் சிறு மழைக்கு கூட தாங்காத சென்னை நகரத்தில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தான்.

சென்னை மழை

சென்னை மழை

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை தொடங்கவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார் பாம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கே.என்.நேரு

கே.என்.நேரு

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தில் ரயில்வே தரப்பில் சுரங்கப்பாதை முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பல ஆண்டுகள் கோரிக்கைக்கு விடுத்த சூழலில் முதலமைச்சர் ஆணைக்கு ஏற்ப 13.40 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது.

 வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை

வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை

மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடியாத இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

English summary
Minister KN Nehru said that 741 motor have been kept ready on behalf of the Chennai Corporation to face the northeast monsoon in a few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X