சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கலுக்கு சிறப்பு பேருந்து முன்பதிவு தொடக்கம்.. தமிழகம் முழுவதும் 24708 பேருந்துகள் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கலுக்கு சிறப்பு பேருந்து முன் பதிவு தொடங்கப்பட்டது. அதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 24708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Minister M.R.Vijayabaskar started pre registration for special buses in CMBT

இதற்கான சிறப்பு கவுன்ட்டர்களை திறந்து வைத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில் ஜனவரி 11 முதல் 14-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 24708 ஆகும்.

முன்பதிவு செய்வதற்காக சென்னையில் 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கான கணினி மையத்தையும் திறந்து வைத்துள்ளேன்.

கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே கே நகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டிலிருந்து பெருங்களத்தூர் வழியாக செல்லாது.

வெள்ளிக்கிழமையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்குகிறது. ஆந்திரா செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும். ஈசிஆர் சாலை செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, குடியாத்தம், ஆர்க்காடு, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஒசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி வழியாக செல்லும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய 2.40 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 4.92 லட்சம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முதல் சுங்கசாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்துகளுக்கு என்று பிரத்தியேக வழி ஒதுக்கப்பட்டுள்ளது
. சென்னை மாநகரத்திற்குள் பேருந்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் செல்பவர்கள் வெளிசுற்று சாலை வாழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அதிகட்டனம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் தீவிர நடவடிக்கையின் மூலமாக குறைந்து விட்டது. ஒரு சில தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிதால் பேருந்து சிறை பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், கடந்த மூன்று ஆண்டுகளில் தனியார் கட்டண கொள்ளை குறைக்கப்பட்டுள்ளது.

சுங்கசாவடிகளில் நீண்ட வரிசையில் பேருந்துகள் நிற்கும் அவலத்தை தடுக்க,சுங்க சாவடிகளில் பேருந்துகளுக்கு என்று தனியாக வரிசை ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுங்க சாவடிகளில் போக்குவரத்து அதிகாரிகள்,போலீசார் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் மட்டும் வருமானம் 17.47 கோடி ரூபாய், இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு.

English summary
Minister M.R.Vijayabaskar inaugurates the special counters for special buses whihc are going to ply for Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X