6 மாத மகப்பேறு விடுப்பு! சுகாதர ஊழியர்களுக்கு மேலும் பல சர்ப்ரைஸ்! அமைச்சர் மா.சுவின் மாஸ் அறிவிப்பு
சென்னை : தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 5971 பேருக்கு 32 கோடி ரூபாய் செலவில் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் மருத்துவம், சுகாதாரம், நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மருத்துவ பணியாளர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர்.
ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம்
இதுமட்டுமல்லாமல் தேவைக்கேற்ப ஒப்பந்த ஊழியர்களை பணி அமர்த்தி சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஊழியர்கள் கோரிக்கை
அவர்களுக்கு வேலை நிரந்தரம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அம்மா மினி கிளினிக், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பணியாற்றிய மருத்துவர்கள் , செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் மா சுப்ரமணியன்
இந்நிலையில் தற்காலிக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விரைவில் அவர்களது கோரிக்கை உரிய முறையில் நிறைவேற்றப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியிருந்தார். ஆனால் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

ஊதிய உயர்வு அறிவிப்பு
இந்நிலையில் சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 5971 பேருக்கு 32 கோடி ரூபாய் செலவில் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் 4,848 செவிலியர்கள் ஊதியம் ரூ 14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பணியாளர்கள் மகிழ்ச்சி
2,448 சுகாதார பணியாளர்களுக்கு ரூ.11,000-ல் இருந்து ரூ,14,000 ஆக ஊதியம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 5,971 பேருக்கு ரூ.32 கோடி செலவில் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதனால் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், செவிலியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.