சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முதல்வர் ஒன்றும் ஸ்டாலின் இல்லை.. அமைச்சர் மாஃபா

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் போல் எடுத்தோம், கவிழ்த்தோம் என அறிக்கை கொடுப்பவர் தமிழக முதல்வர் அல்ல என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முதல்வர் ஒன்றும் ஸ்டாலின் இல்லை.. அமைச்சர் மாஃபா

    சென்னை திருவேற்காடு பகுதியில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் : கொரோனா பாதிப்பில் கடந்த வாரத்தில் மட்டும் ஆந்திரா மற்றும் கர்நாடகா இரண்டு மாநிலங்கள் தர வரிசையில் நமக்கு மேல் சென்றுள்ளன. அப்படி இருந்தும் மேலும் ஒரு மாதத்திற்கு முதல்வர் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தளர்வுகள்

    தளர்வுகள்

    12 விதமான தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் தளர்வுகள் குறித்து கேட்டுள்ளனர். அதனை முதல்வர் பரிசீலித்து நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். பூங்காக்கள், யோகா, ஜிம் உள்ளிட்டவற்றை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அதனை முதல்வர் பார்வைக்கு எடுத்துச் செல்வோம்.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    புதிய கல்விக் கொள்கை என்பது நான் கல்வி துறை அமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் அமைப்பில் 19 மாற்றங்களை கேட்டோம், அந்தக் குழுவில் இருந்த கல்வியாளர்கள் மாநில அரசை சார்ந்தவர்கள் இல்லை என்ற கோரிக்கையை எடுத்து வைத்தோம், அதனை முழுமையாக தடுத்து நிறுத்தியது தமிழக அரசு.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    புதிய கல்விக் கொள்கையின் முழுமையான அறிக்கை மக்கள் பார்வைக்கு வைக்கவில்லை. முழுமையான அறிக்கை வந்த பிறகு இதனை ஆய்வு செய்து மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி என்பது கட்டாயம் இல்லை. வட மாநிலங்களில் மும்மொழித் கல்விக் கொள்கையில் தமிழை ஒரு மொழியாக வைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

    ஆராய்ந்து முடிவு

    ஆராய்ந்து முடிவு

    முழுமையான அறிக்கை வந்தவுடன் முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று முடிவெடுத்து சொல்வோம் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எடுத்தோம், கவிழ்த்தோம் என திமுக தலைவர் ஸ்டாலின் போல முதல்வர் பழனிசாமி அறிக்கை கொடுப்பவர் அல்ல ஆராய்ந்து முடிவை அறிவிப்பவர் என தெரிவித்தார்.

    English summary
    Minister Mafoi Pandiyarajan says that Chief Minister Edappadi Palanisamt is not like Stalin to take decision in haste.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X