சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிப்.1 முதல் ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வு! உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை அவர் அறிவித்திருக்கிறார்.

முறைகேடுகளுக்கு இடம் அளிக்காத வகையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்! கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!

பிப்ரவரி 1

பிப்ரவரி 1

பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார். ஆசிரியர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசிய பிறகு இதனை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி.

விடைத்தாள்கள்

விடைத்தாள்கள்

பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படும் என்றும் எவ்வித முறைகேடுகளும் நிகழாத வண்ணம் ஆன்லைனில் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவு அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். கிராமப்புறங்களில் மாணவர்கள் அப்லோடு செய்யும் விடைத்தாள்கள் மோசமான இணையத்தொடர்பால் வந்து சேர தாமதமானாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

 நேரடித் தேர்வுகள்

நேரடித் தேர்வுகள்

கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கல்வித்தரத்தை பொறுத்தவரை சமரசமின்றி உயர்க்கல்வித்துறை செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நிறைய மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருந்தும் கொரோனா பேட்ஜா எனக் கேட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக தனக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

 மாணவர்கள் மகிழ்ச்சி

மாணவர்கள் மகிழ்ச்சி

இதனிடையே ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டங்கள் எல்லாம் கூட அவர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Ponmudi announce, All College Semester exam online from Feb.1 Minister Ponmudi announce, All College Semester exam online from Feb.1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X