சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாலியாக பேசக் கூடிய ராஜேந்திர பாலாஜியே கோபமாகிட்டாரே.. கமல் பேச்சால் ஏற்பட்ட கசமுசா!

கமல்ஹாசனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக பேசியிருக்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு.. ராஜேந்திர பாலாஜி கேள்வி- வீடியோ

    சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு பெரும் சலசலப்புகளையும் அதிர்வுகளையும், அரசியல் எங்கு போய்க் கொண்டுள்ளது என்ற அச்சத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    கமல்ஹாசன் பேசிய சர்ச்சைக் கருத்தைக் கண்டித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

    சாதாரணமானவர்கள் பேசுவதையே சட்டம் கண்டிக்கிறது, தடுக்கிறது, தண்டனையும் கொடுக்கிறது. அப்படி இருக்கையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர், இப்படி சர்வ சாதாரணமாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை இப்படியெல்லாம் அதிமுகவினர் பேசியதே இல்லையே என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.

    கமல் என்ன ஜனாதிபதியா எதுவேனாலும் பேசுவதற்கு?.. ஐ.எஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா?.. அமைச்சர் கமல் என்ன ஜனாதிபதியா எதுவேனாலும் பேசுவதற்கு?.. ஐ.எஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா?.. அமைச்சர்

    பெரியார் சிலை

    பெரியார் சிலை

    இந்த நிலையில் நாம் பல முன் சம்பவங்களை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. முன்பு பெரியாருக்கு எதிராக பாஜக தலைவர்கள் சிலர் கடுமையாக கொந்தளித்து கருத்துக்களைக் கொட்டி வந்தனர். பெரியார் சிலைகள் மீது தாக்குதல் எல்லாம் நடத்தப்பட்டது. பெரியார் சிலையின் தலையை வெட்டுவோம் என்றெல்லாம் சிலர் ஆவேசமாக முழங்கினர்.

    ஆவேச பதிலடி

    ஆவேச பதிலடி

    அதற்கு பதிலடி கொடுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட, அப்படி செய்தால் நான் அவர்களது கையை வெட்டுவேன் என்று கூறியிருந்தார். அதுபோன்ற சம்பவத்தின்போதெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ அல்லது பிற அமைச்சர்களோ இந்த அளவுக்கு ஆவேசமான பதிலடியைக் கொடுத்ததில்லை.

    தீவிரவாதிகள்

    தீவிரவாதிகள்

    அதேபோல இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பது போல சில பாஜக தலைவர்கள் பகிரங்கமாக டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்தபோதும் அதுதொடர்பாக அதிமுக அமைச்சர்கள் யாரும் கருத்து கூறியதில்லை. ஏன் கண்டனம் கூட தெரிவித்ததில்லை. அதெப்படி இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறலாம் என்று யாரும் கண்டிக்கவும் இல்லை. ஒரு வழக்கு கூட பதிவானதும் இல்லை.

    எதார்த்த பேச்சு

    எதார்த்த பேச்சு

    இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆவேசம் அனைவரையும் பதற வைத்துள்ளது. உண்மையில் ராஜேந்திர பாலாஜி நகைச்சுவை உணர்வு மிக்கவர். மிகவும் ஜாலியாக, எதார்த்தமாக பேசக் கூடியவர். அவரது பேச்சுக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் போலவே இவரும் ஜாலியாக, நகைச்சுவையாக பேசக் கூடியவர். அப்படிப்பட்டவர் இப்படி நாக்கை வெட்டுவேன் என்று வாயை விட்டது அதிர வைத்துள்ளது.

    பண்பாடு, அடக்கம்

    பண்பாடு, அடக்கம்

    கோபம் இருக்கலாம் ஆனால் கொலை வெறி இருக்கக் கூடாது என்பார்கள். தலைவர்களுக்கு புரிந்தால் சரி.. காரணம், தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி என்பார்கள். எனவே தலைவர்கள் நாகரீகமாக, பண்பாட்டுடன், அடக்கமாக நடந்து கொள்வதுதான் அவர்கள் வளர்ந்த இயக்கத்திற்கும், அவர்களை பின்பற்றும் தொண்டர்களுக்கும் நலம் பயக்கும்.

    English summary
    Rajendra Balaji controversy speech about MNM Leader Kamal hasan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X