மிரட்டுறீங்களா.. நீங்க செஞ்ச தப்புக்கு 6 தலைமுறை ஜெயில்ல இருக்கணும்.. ஸ்டாலின் மீது பாய்ந்த அமைச்சர்
சென்னை: "என்ன எப்ப பார்த்தாலும் ஜெயிலுக்குப் போயிருவோம்னு சொல்லுறீங்க? மிரட்டுறீங்களா? நீங்க என்ன சர்வாதிகாரியா? சதாம் உசேனா? சதாம் உசேன் என்ன கதியானாருன்னு தெரியுமா? நீங்க முதலமைச்சரா என்னைக்கு ஆக போறீங்க? நீங்க என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா? நீங்களே சொல்லுறீங்க.. நீங்க செஞ்ச தப்புக்கு ஆறு தலைமுறை ஜெயில்ல இருக்கணும்" என்று முக ஸ்டாலினை காட்டமாக விமர்சித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.
இவர் ஒரு அமைச்சர் மாதிரியா பேசுறார்? கண்டபடி பொறுப்பில்லாமல் பேசுகிறாரே என்று திமுகவினர் ராஜேந்திர பாலாஜியை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் ராஜேந்திர பாலாஜியோ, ஒருமையில் பேசி, மானத்தையே வாங்கிவிடும் அளவுக்கு கேள்விகளை கேட்டு வருகிறார்.. இதனால் அதிமுக, திமுக என இரு வட்டாரங்களுமே சூடாகி உள்ளன.

அதிகாரி
"ஐநா அதிகாரியை போல உலக பிரச்சனைகளை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி கொண்டுக்கும் அவர், திமுக ஆட்சி அமைந்ததும் புழலில் வாசம் செய்யப்போகும் மனிதர்" என்று திமுக தலைவர் கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் பேசியதுதான் திமுக தரப்பை சூடாக்கிவிட்டது.

திமுக
"என்னய்யா இது? அண்ணா வளர்த்த திமுக அது.. தெருவுல நின்னு போராடிக்கிட்டு இருந்த திமுகவை, இன்னைக்கு கம்ப்யூட்டர் ரூம்ல கொண்டுபோயி வச்சிட்டாரே.. துண்டுச்சீட்டு இல்லாம அவரால ஒருக்காலும் படிக்க முடியாது... என்ன எப்ப பார்த்தாலும் ஜெயிலுக்குப் போயிருவோம்னு சொல்லுறீங்க? மிரட்டுறீங்களா? நீங்க என்ன சர்வாதிகாரியா? சதாம் உசேனா? சதாம் உசேன் என்ன கதியானாருன்னு தெரியுமா?

சுப்ரீம் கோர்ட்
நீங்க முதலமைச்சரா என்னைக்கு ஆக போறீங்க? நீங்க என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா? நீங்களே சொல்லுறீங்க.. நீங்க செஞ்ச தப்புக்கு ஆறு தலைமுறை ஜெயில்ல இருக்கணும். திமுக ஆட்சியில அடிச்ச கொள்ளை எத்தனை? எடப்பாடியார் ஆட்சியில கட்டப் பஞ்சாயத்து இருக்கா? அம்மாவோட ஆட்சியில கட்டப் பஞ்சாயத்து இருக்கா?"

சங்கி
5 வருடம் நக்கி பிழைத்தது ஸ்டாலின் தான்.. சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ள எங்களை எல்லாம் சுட்டு கொன்றுவிடுவார் போல இருக்கிறது.. ஒழுக்கமா பேசினால் நாங்களும் ஒழுக்கமா பேசுவோம்.. இல்லாவிட்டால் அசிங்கமா பேசுவோம் என்றார் அமைச்சர்.

விமர்சனம்
கடந்த கொரோனா காலத்தில் இருந்தே ராஜேந்திர பாலாஜி திமுகவை சரமாரி விமர்சித்து வருகிறார்.. அதற்கு முன்புபேசியதைவிட, முதல்வர் அவருக்கு மீண்டும் மா.செ., பொறுப்பு தந்ததில் இருந்தே இந்த காட்டம் கூடியிருந்தது. அமைச்சருக்கு தங்கம் தென்னரசு சற்று எல்லைமீறிய அதேத சமயம் உரிய பதிலடியை தந்திருக்கிறார்.. என்றாலும் திராவிட கட்சிகளில் இப்படி வார்த்தைகளை தலைவர்களே உதிர்த்து வருவது வேதனை தருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.