சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி "மல".. அஜித் "தல".. ராஜேந்திர பாலாஜியின் டைமிங் + ரைமிங்.. செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொசுக்குன்னு இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை... "அவர் மலை.. இவர் தலை" என்று ரஜினிகாந்த்துடன் - அஜீத்தை ஒப்பிட்டு பேசி, நடிகர் விஜய்யின் இமேஜை காலி செய்துள்ளார்... இது விஜய் ரசிகர்களை மேலும் கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது.

இயல்பாகவே, ராஜேந்திர பாலாஜி ஒரு அஜித் ரசிகர்.. "அஜித் ஒரு அதிசய உலகின் நாயகன். எல்லா தரப்பு மக்களுக்கும் அவரை பிடிக்கும்.. அடிபட்டு, காயப்பட்டு கிடப்பவன், எழுந்து நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் அஜித்.

அடிமேல் அடி வாங்கி, காயப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, அல்லல்பட்டு நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பிறகு பிம்பமாக எழுந்து ஒளியாக மலர்ந்து அதன் மூலமாக எதிரிகளை அழிக்கின்ற காட்சிகள் அஜித் படத்தில் நிறைய வரும்... அது இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

ரஜினிகாந்த் அவர்களே, தடியடி நடத்தியது தெரியாதா.. கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா.. வன்னியரசு காட்டம்!ரஜினிகாந்த் அவர்களே, தடியடி நடத்தியது தெரியாதா.. கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா.. வன்னியரசு காட்டம்!

ரசிகர்

ரசிகர்

ரஜினிகாந்த், அஜித் படத்தை பார்க்கும்போது, நாமளும் இப்படி ஆகணும்னு நினைப்போம். அரசியலுக்கு அஜித் வரலாமே.. நல்ல மனிதர், பந்தா இல்லாதவர், ஒரு இடத்துக்கு வந்தால், போனால், யாருக்கும் இடைஞ்சல் தராமல் வந்துட்டு போகக்கூடியவர். அப்படிப்பட்டவரை நாடு ஏற்றுக் கொள்ளும். அதனால வரட்டும்" என்று பலமுறை மனசார சொல்லியவர் ராஜேந்திர பாலாஜி.

ரெய்டு

ரெய்டு

இப்போது, திரும்பவும் ரஜினி, அஜித்தை வைத்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. சமீபத்தில் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறையினர் சலுகை செய்திருப்பதாகவும், ஆனால் விஜய்க்கு ரெய்டு நடத்தி நெருக்கடி தந்ததாகவும் கொடுப்பதாகவும் முக்கிய அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த ரெய்டு நடத்தியதில், ஆளும் கட்சியின் அழுத்தம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

விஜய்

விஜய்

இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கருத்து கேட்டனர. அதற்கு அமைச்சர், "ரஜினிகாந்த்துடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விஜய் அவருக்கு நிகரானவர் இல்லை.. அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை... வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடந்துள்ளது.. அதுமட்டுமல்ல.. ரஜினிக்கு நிகரானவர் அஜித் தான்.. ரஜினி மலை என்றால் அஜித் தல.. " என்றார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த பேட்டிக்கு ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. அதேபோல, ஒத்த பேட்டியில் விஜய்யை இவ்வாறு குறிப்பிட்டுள்ளதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சூடாகி உள்ளனர்.. அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்து போஸ்டர் அடித்து ஒட்டும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.. இப்போது ராஜேந்திர பாலாஜியின் பேட்டி மேலும் அவர்களை உசுப்பிவிடுவதாகவே அமைந்திருக்கிறது.

English summary
minister rajendra balaji has criticized actor vijay and he says about rajinikanth and actor ajith
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X