• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தலைவா... இப்படி திரும்பி ஒரு போஸ்.. அப்படி திரும்பி ஒரு போஸ்.. நடுநடுவே "இது ஓகேவா"!

|
    அமெரிக்கா.. வேட்டி சட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Minister Rajendra Balajis America Tour with Dhoti

    சென்னை: இப்படி திரும்பி ஒரு போஸ்.. அப்படி திரும்பி ஒரு போஸ்.. நடுநடுவே "இது ஓகேவா" என்று கேட்டு போஸ் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால், அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியே தெறித்து கொண்டு ஓடுகிறது.

    தமிழ்நாட்டு அமைச்சர்களில் பெரும்பாலானோர் ஃபாரீன் போயுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் துறை ரீதியான காரணங்களுக்காகவும், அரசு முறை பயணமாகவும் வெளிநாட்டில் உள்ளனர்.

    எடப்பாடியார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர்.. வரிசையில் ராஜேந்திர பாலாஜியும் சேர்ந்துள்ளார். கடந்த சில தினங்களாகவே முதல்வர் உட்பட அமைச்சர்களை கோட்-சூட், வேஸ்கோட் போன்ற உடைகளில் நாம் பூரித்து போய் பார்த்து வருகிறோம்.

    ப்ளூ கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ.. முகமெல்லாம் புன்னகை.. அமெரிக்க பஃபல்லோ பண்ணையில் அசத்திய எடப்பாடியார்ப்ளூ கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ.. முகமெல்லாம் புன்னகை.. அமெரிக்க பஃபல்லோ பண்ணையில் அசத்திய எடப்பாடியார்

    மறத் தமிழன்

    மறத் தமிழன்

    அதனால் அமெரிக்கா போயுள்ள ராஜேந்திர பாலாஜியும் கோட்-சூட் போடுவார் என்று ஆவலுடன் இருந்தோம். ஆனால் அதே பளிச் வேட்டி-சட்டையில் அங்கு மறத்தமிழனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல்வரை சந்தித்த கையோடு, நயாகரா நீர்வீழ்ச்சி பக்கம் இதே வேட்டி சட்டையுடனே சென்றுவிட்டார்.

    இது ஓகேவா?

    இது ஓகேவா?

    அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளுக்கு நடுவே நம்ம ஆள் மட்டும் வித்தியாசமாக காணப்படுகிறார். நயாகரா நீர்வீழ்ச்சி நாலாபுறமும் கொட்ட, அதனை ரசித்து பார்க்கும்படி வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். நடுநடுவே வேட்டியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு, இது ஓகேவா என்று கேட்டு போஸ் தருகிறார்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    ஒரு பக்கம் அமெரிக்காவில் முதல்வர் கோட்-சூட் போட்ட வீடியோ வைரலானது என்றால், இன்னொரு பக்கம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த வழக்கமான வேட்டி-சட்டை வீடியோவும் வைரலாகிறது. எதனால் இவர் கோட்-சூட் போடவில்லை என தெரியவில்லை.

    பூரிப்பு

    பூரிப்பு

    எங்கு போனாலும் தமிழன் தமிழன்தான் என்பதை வெளிப்படுத்தவா அல்லது அவருக்கு கோட்-சூட் போட விருப்பமில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவே போனாலும் ராஜேந்திர பாலாஜி தமிழனாகவே வலம் வந்து கொண்டிருப்பதை நம் மக்கள் பூரிப்புடனே கவனித்து வருகிறார்கள்.

    English summary
    Minister Rajendra Balajis America Tour with Traditional dress Dhoti and Shirt. This Video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X