சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதிலை அளித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாரே வருக வருக என போஸ்டர்களை ஒட்டி திக்குமுக்காட செய்தனர்.

இந்த நிலையில் அவர் மதுரை மாவட்டம் பரவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி : பலன் கருதாது கடமையை செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் - முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி : பலன் கருதாது கடமையை செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் - முதல்வர்

தலைமை

தலைமை

அதற்கு அவர் பதிலளிக்கையில், அடுத்த தேர்தலின் போது சட்டசபை உறுப்பினர்கள் கலந்து பேசி முதல்வரை தேர்வு செய்வர். ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் அதிமுக செயல்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

செல்லூர் ராஜு பேச்சு

செல்லூர் ராஜு பேச்சு

சட்டசபை தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் பணியாற்றுகிறது என்றார். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை, தொழில் முதலீடு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து அமைச்சர்களும் பாராட்டி வருகிறார்கள். அது போல் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு நிச்சயம் எடப்பாடியின் பெயரை சொல்வார் என எதிர்பார்த்த போது அவர் அதிரடியாக ஒரு பதில் கூறியுள்ளார்.

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

இதை பார்க்கும் போது சசிகலா மீது செல்லூர் ராஜுவுக்கு தனி பாசமும் மரியாதையும் உண்டு. தற்போது சசிகலா சிறையிலிருந்து தண்டனை காலம் முடிவதற்குள் அவர் விடுதலை ஆக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு விடுதலையானால் அவர் அதிமுக தலைமையை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர்

முதல்வர்

ஏற்கெனவே சசிகலா முதல்வராக தயாராக இருந்த நிலையில்தான் சொத்துகுவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேரிட்டது. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக இருந்த போது கட்சியில் கட்டுக் கோப்புடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே சசிகலாவை மனதில் வைத்துக் கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு பேசினாரா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் இதற்கு மற்ற நிர்வாகிகள் ஒப்புக் கொள்வார்களா? ஏற்கெனவே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலா ரிலீஸ்

சசிகலா ரிலீஸ்

இல்லை வேறு யாரையாவது முதல்வராக்கலாம் என்ற எண்ணத்தில் செல்லூர் ராஜு கூறினாரா என்றும் தெரியவில்லை. மேலும் அதிமுகவும் அமமுகவும் சசிகலா விடுதலைக்கு பிறகு இணையலாம் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு செல்லூரார் இப்படி பேசுகிறாரா என்பதும் புரியவில்லை. செல்லூராரின் இத்தகைய பதிலால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை கேள்விகளுக்கு சசிகலா ரிலீஸுக்கு பிறகு அல்லது தேர்தல் நேரத்திலோ விடை கிடைக்கும்.

English summary
Minister Sellur Raju gives stunning reply for Who is the next CM of Tamilnadu? asked by reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X