சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சல்பர் ஜாஸ்தி.. காரம் தூக்கல்.. ஆனா எகிப்து வெங்காயம் இதயத்திற்கு இதமானது.. செல்லூர் ராஜு செம!

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 13-12-2019 | Morning News | oneindia tamil

    சென்னை: எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை கிலோவுக்கு ரூ 200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் விலையுயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.

    அதன் ஒரு பகுதியாக எகிப்திலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் வரத்தால் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ 20 முதல் 30 குறைவாக விற்கப்படுகிறது.

    சல்பர்

    சல்பர்

    இந்த வெங்காயம் பார்ப்பதற்கு பெரிதாக இருப்பதால் அதை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது.

    காரமும் தூக்கல்

    காரமும் தூக்கல்

    சல்பர் அதிகமாக உள்ளதால் காரமும் தூக்கலாக இருக்கிறது. எனவே இது இதயத்திற்கு நல்லது. எகிப்து வெங்காயத்தை முதல்வர் அறுத்து சாப்பிட்டு சோதனை செய்துள்ளார். தமிழகத்திலேயே அடுத்த வாரம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    வைரல்

    வைரல்

    வெங்காய வரத்து அதிகரித்தால் இனி வரும் காலங்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என்றார் செல்லூர் ராஜூ. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் ஷீட்டுகளை போட்டு சமூகவலைதளங்களில் வைரலானார்.

    நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    அது போல் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அதிகரித்த போது மக்கள் தங்கள் வாசலில் மாட்டு சாணத்தால் மெழுகினால் டெங்கு காய்ச்சல் வராது என கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது போல் அவ்வப்போது புதிய தகவல்களை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இதனால் அவரை சைன்டிஸ்ட் செல்லூர் ராஜூ என நெட்டிசன்கள் அன்போடு அழைத்தனர்.

    English summary
    Minister Sellur Raju says that Egypt Onion is good for Heart as it has more sulphur content.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X