சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் விளம்பரம்தாங்க.. உதிரும் சருகுகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. செல்லூர் ராஜூ பொளேர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸ் தியானம் - குருமூர்த்தி சர்ச்சை பேச்சு | Gurumurthy Speech OPS

    சென்னை: விளம்பரம் தேடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்துள்ள உதிரும் சருகுகளுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

    திருச்சியில் நடந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறுகையில் நான் கூறியதாலேயே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்போது தியானம் மேற்கொண்டார்.

    Minister Sellur Raju says that Gurumurthy is fallen leaves

    ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது, பிரிந்து கிடந்த அதிமுகவை நான்தான் ஒருங்கிணைத்தேன் என குருமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் அதிமுகவில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளது.

    இதற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் செய்தியாளர்களை அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார்.

    முன்பும், பின்பும் கூறாமல் நடுவில் கூறியதை மாத்திரம் திரித்து பரப்புவது கன்னியமல்ல.. குருமூர்த்திமுன்பும், பின்பும் கூறாமல் நடுவில் கூறியதை மாத்திரம் திரித்து பரப்புவது கன்னியமல்ல.. குருமூர்த்தி

    அப்போது அவர் கூறுகையில் வெங்காயம் விலை ஏற்ற விவகாரத்தில் தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை என்ன செய்வது? மகாராஷ்டிராவில் மழைக்காலமாக இருப்பதால் வெங்காய விளைச்சல் குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது.

    விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே துணை முதல்வர் குறித்து சிலர் பேசுகின்றனர். அவர்கள் உதிரும் சருகுகள். அதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என்றார்.

    English summary
    Minister Sellur Raju says that Gurumurthy is falling leaves, there is no need to answer his comments.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X