சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிதூள்.. மரக்கன்று நட்டால் 2 மார்க்.. சபாஷ் போட்டு தேங்ஸ் சொன்ன விவேக்!

மரக்கன்று நடும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மற்றம் - செங்கோட்டையன்- வீடியோ

    சென்னை: மரக்கன்றுகளை நடும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த உற்சாக அறிவிப்புக்கு நடிகர் விவேக் நன்றியை உரித்தாக்கி உள்ளார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    புதிய பாடத்திட்டம், பயோமெட்ரிக் முறை வருகை பதிவு, இலவச நீட் தேர்வு மையங்கள், அரசு பள்ளியில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் என அடுக்கடுக்காக அவர் செய்து வரும் திட்ட செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

    50 பேர் தேர்வு

    50 பேர் தேர்வு

    இதனிடையே பள்ளி மாணவ மாணவிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி, அந்த நாட்டின் தொழில்நுட்பங்கள் குறித்து கற்பிக்கப்படும் என செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் அறிவியலில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    2 மதிப்பெண்கள்

    2 மதிப்பெண்கள்

    10 நாட்கள் இந்த கல்வி சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று மாணவர்கள் தமிழகம் திரும்பினார்கள். பரிசுகளை தந்து அவர்களுடன் உரையாடினார் செங்கோட்டையன். அப்போது கல்வி திட்டத்திலேயே இயற்கையையும் பாதுகாக்கும்படியான ஒரு அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறினார்.

    புதிய அறிவிப்பு

    புதிய அறிவிப்பு

    மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கவுமே இந்த திட்டத்தை செங்கோட்டையன் அறிவித்தார். இதன்மூலம் 2.5 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் நம்புகிறார்.

    விவேக் ட்வீட்

    விவேக் ட்வீட்

    அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் விவேக் நன்றி சொல்லி உள்ளார். விவேக்கிடம் 1 கோடி மரக்கன்றுகளை நடுமாறு அப்துல் கலாம் கூறியதையடுத்து கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் விவேக். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

    பாராட்டுக்கள்

    "மரம் நடுதலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே என்று முன்பே கோரிக்கை வைத்தேன். ஆனால் இன்னும் சிறப்பு வடிவமாக இத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்." எனதெரிவித்துள்ளார்.

    சிறப்பான செயல்பாடு

    சிறப்பான செயல்பாடு

    இருக்கும் தமிழக அமைச்சர்களிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் செங்கோட்டையனுக்கு இந்த மதிப்பெண் அறிவிப்பால் மேலும் மதிப்பு கூடி வருகிறது.

    English summary
    TN Minister Sengottaiyan announced 2 marks to the Students for plant save
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X