சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாஸ்மாக் திறப்பு.. பாஜகவிற்கு நச்சுன்னு பதில் சொன்ன செந்தில் பாலாஜி.. பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்துவது குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்துகிறது என்று குற்றம்சாட்டி உள்ளார்.

Recommended Video

    CM MK Stalin விளக்கம்! TASMAC Reopen ஏன்? | Corona Lockdown | Oneindia Tamil

    டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத 11 மாவட்டங்களில் இருந்து மது வாங்க செல்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து.. நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து..

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் , கொரோனா தொற்று குறைந்து உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது.

     சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் அவ்வாறு முக கவசம் அணிந்து வராத நபர்களுக்கு கட்டாயம் மது வழங்கப்படாது மேலும் அரசு விதிமுறையை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மேலும் இதனை கண்காணிக்க கடை விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் காவல்துறையினர் அங்கு நிறுத்தப்படுவார்கள்.

    27 மாவட்டங்கள்

    27 மாவட்டங்கள்

    மது விற்பனை செய்யப்படும் 27 மாவட்டங்களுக்கு 11 மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த 11 மாவட்டத்தினர் கட்டாயம் தடுத்து நிறுத்தப்படுவார்கள். காவல்துறை மூலம் தற்போது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் மதுபானங்கள் எவ்வாறு காவல்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதுபோல அவர்களிடம் இருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது உறுதியாக தடுக்கப்படும். சட்டவிரோதமாக ஒரு சொட்டு சாராயம் கூட விற்பனைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- காவல் துறையினர் அதிக அளவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தமிழகத்தில் கள்ள சாராயம் இல்லாத மாநிலமாக விரைவில் மாற்றப்படும்" இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்,

    பெட்ரோல் விலை

    பெட்ரோல் விலை

    மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்துவது குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்துகிறது. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தாது ஏன்? கடந்த ஆட்சியில் தொற்று அதிகமாக இருந்த போது டாஸ்மாக் திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். பாஜக ஆளும் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. இப்போது 2மணி நேரம் நீடித்துள்ளார்கள்" என்று கூறினார்.

    English summary
    Minister Senthil Balaji accused the BJP of waging a struggle against the liquor store for politics and to show its presence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X