• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தம்பி அடிப்படை அறிவு வேண்டும்: மாரிதாஸுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை : திமுக ஆட்சியில் நிலக்கரியை காணவில்லை என்ற எழுத்தாளர் மாரிதாஸின் பதிவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அன்பு தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அதிமுக ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு, ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவு வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்திலுள்ள நிலக்கரி கிடங்குகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது , கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஏகப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் சரிசெய்யப்படும் என ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம்.

 ஊசியால் வந்த வினை.. சிக்கிய சசிதரூர்.. மனைவி மரண வழக்கில் டெல்லி நீதிமன்றம் எப்படி விடுவித்தது? ஊசியால் வந்த வினை.. சிக்கிய சசிதரூர்.. மனைவி மரண வழக்கில் டெல்லி நீதிமன்றம் எப்படி விடுவித்தது?

அதிமுக அரசு

அதிமுக அரசு

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணம், சரியான வழியில் பயன்படுத்தப்பட்டு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மின்வாரியத்தில் இவ்வளவு பெரிய தவறுகள் நடந்திருப்பது, கடந்த அதிமுக அரசை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது.

தப்பிக்க முடியாது

தப்பிக்க முடியாது

தவறு இழைத்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. மின்வாரியத்தில் நன்றாக உழைக்கக்கூடிய அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி இழப்புக்கு, வட்டி செலுத்தும் அளவுக்கு மின்வாரியம் உள்ளது. மோசமான நிர்வாகத்திலிருந்து மின்வாரியத்தை மீட்டெடுத்து, வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுக்கும்.

நிலக்கரி காணவில்லை

நிலக்கரி காணவில்லை

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. இதில் குற்றம்புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் . ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் மாயமானது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திமுக ஆட்சியில் காணவில்லை

திமுக ஆட்சியில் காணவில்லை

இந்நிலையில் எழுத்தாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக ஆட்சிக்கு வந்த 100நாளில் முக்கிய சாதனை மின்வாரியத்திலிருந்து 2லட்சம் டன் நிலக்கரி காணவில்லை. தகவல் கசிந்ததும்;திமுக அமைச்சர் நிலக்கரி காணவில்லை என்று இன்று பேட்டி கொடுக்கிறார். அது சுமார் 20நாள் தேவையான நிலக்கரி , தினமும் update செய்ய வேண்டிய தகவல் திடீர் என எப்படி மாயம்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அடிப்படை அறிவு வேண்டும்

அடிப்படை அறிவு வேண்டும்

மாரிதாஸின் இந்த பதிவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் தனது பதிவில், "அன்பு தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அதிமுக ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு. அறமும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள் தான், இல்லாததை இருப்பதாக White boardல் update செய்துக் கொண்டிருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

English summary
Electricity Minister Senthil Balaji has retaliated against maridhas over post against coal issue. The minister said that . Anbu Thampi, 2.38 lakh tonnes of coal is magic in the AIADMK regime. this is an account up to March 2021. which requires basic knowledge to investigate the veracity of a message.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X