சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சும்மா நிறுத்துங்க.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்!.. எடப்பாடியை விமர்சித்த அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..! பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!

முதல்வர் ஏற்கெனவே மிக தெளிவாக கடந்த 4 மாதங்களில் திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் 220 வாக்குறுதிகளை எவ்வாறெல்லாம் நிறைவேற்றியுள்ளோம் என்பதை தெரிவித்துள்ளார். எந்தெந்த வாக்குறுதிகள் எந்த வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொன்ன வாக்குறுதிகளில் எவற்றை நிறைவேற்றியுள்ளோம்.

முதல்வர்

முதல்வர்

சொல்லாத வாக்குறுதிகளில் எவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்றெல்லாம் முதல்வர் விளக்கியுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்நத புலவர் பெருமானாக மாறி தனது கூட்டத்திலே தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் திசை திருப்பக் கூடிய தவறுகளை செய்திருக்கிறார்.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியது போல் திமுக அரசு இருப்பதாக பொய்யுரையை புனைந்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வரிசையாக அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்கள். அந்த அறிவிப்புகளில் அவர்களாக சொன்ன அறிவிப்புகளிலேயே 537 அறிவிப்புகளை எந்த நடவடிக்கையும் இல்லாமல் நிலுவையில் போட்டு வைத்திருந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

348 அறிவிப்புகளுக்கு ஆணைகளை வெளியிட்டார்கள். நிதி ஒதுக்கீடு முழுமையாக செய்யவில்லை. அந்தப் பணிகள் கிடப்பில் உள்ளன. 143 அறிவிப்புகளுக்கு ஆணைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சல்லிக் காடு கூட ஒதுக்கவில்லை. 20 அறிவிப்புகளுக்கு ஆணையும் வெளியிடவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை.

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

26 அறிவிப்புகள் முற்றிலும் வெளியிடவில்லை. எப்படி இந்த அறிவிப்புகளை அறிவித்தார்கள் என்றே தெரியாமல் எந்தவித ஆராய்ச்சியோ அடிப்படை தகவல்களே இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சட்டசபையில் அறிவித்துவிட்டு, அவற்றை கைவிற்றுகிறார்கள். ஆனால் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசை பார்த்து அவர் அவதூறு கூறுவது நகைப்பாக உள்ளது.

மஞ்சள்

மஞ்சள்

காமாலைகாரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதை போல அவர் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக திமுக அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். முதல்வர் சொன்னதை ஒழுங்காக கேட்டிருந்தால் அவருக்கு எந்த ஐயப்பாடும் இருந்திருக்காது. அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்க முறைகேடுகளில் திமுகவினர் தான் பலன் அடைந்திருப்பதாக கூறியுள்ளார். இதில வேடிக்கை என்னவென்றால் முறைகேடாக நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடாக வென்று அதற்கு தலைவராக வந்தவர்கள் அனைவரும் அதிமுகவினர்தான். அவர்களை கைகளில் வைத்துக் கொண்டு மிகப் பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் விளக்கியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

மடியில் மொத்த கன்னத்தையும் வைத்துக் கொண்டு பதறிப் போய் பேசி வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்க நடுஇரவில் கூட இன்றைய முதல்வர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று புகார் அளித்தார். அன்றைக்கு தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக் கொண்டு முறைகேடுகளுக்கு முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமி , மக்கள் அதையெல்லாம் மறந்துவிட்டார் என நினைக்கிறாரா?

English summary
Minister Thangam Thennarasu criticises Edappadi Palanisamy about unemployment in AIADMK regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X