சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி! உண்மையை மறைக்காதீர்கள்.. கோபமடைந்த தங்கம் தென்னரசு!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் என்னென்ன என்பதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

Recommended Video

    தேர்தல் வாக்குறுதி..505ல் 202 நிறைவேத்தியாச்சு: எடப்பாடிக்கு முதல்வர் ஸ்டாலின் பக்கா பதிலடி!

    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுக்க ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது அந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி மாவட்டத்தில் ஆளுங்கட்சியாக இருந்ததை விட எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் அதிக வரவேற்பு கிடைக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி தற்போது திமுக இந்த தேர்தலை நடத்துகிறது.

    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. "அந்த 8 பேரும் யார்னு பாருங்க".. திமுகவை சாய்க்க புதுரூட்டில் எடப்பாடி

    அதிமுகவின் கோட்டை

    அதிமுகவின் கோட்டை

    தென்காசி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக வேட்பாளர்களும் கட்சியினரும் கடுமையாக உழைக்க வேண்டும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் 525 அறிவிப்புகள் வெளியாகின. வரலாற்றில் இல்லாத அளவுக்கு திமுக இத்தனை வாக்குறுதிகளை கொடுத்தது.

    கூட்டுறவு சங்கம்

    கூட்டுறவு சங்கம்

    ஆனால் கடந்த 4 மாதங்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் ரத்து என அறிவித்துவிட்டு ஆட்சியை பிடித்த திமுகவோ இப்போது பல விதிமுறைகளை வகுத்து அந்த திட்டம் முழுமையாக ஏழை மக்களை போய் சென்றடையாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் திமுக திறந்து வைக்கிறது என தெரிவித்தார்.

    சென்னை தலைமைச் செயலாளர்

    சென்னை தலைமைச் செயலாளர்

    இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் மனதில் திணிக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சிக்கிறார். அவர் சில உண்மைகளை மறைத்து பேசினாலும் திமுக ஆட்சியை பொருத்தவரை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 505 வழக்குகளை நாங்கள் நிறைவேற்றுவோம்.

    உண்மையை மறைத்த எடப்பாடி

    உண்மையை மறைத்த எடப்பாடி

    இதை தமிழக மக்கள் நம்புகிறார்கள். எனவே உண்மையை மறைக்க எடப்பாடி முயல்கிறார். திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. கொரோனா தொற்று நடவடிக்கைகளையும் இந்த அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. மேலும் முதல்வர் தலைமையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் எல்லா தகவல்களும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

    41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

    41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

    மேலும் 2,120 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்கள் மூலம் 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். மேலும் ஏற்றுமதி கொள்கைகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஆனால் எடப்பாடி ஆட்சியில் அப்படி எந்தவொரு கொள்கையும் வெளியிடப்படவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம்பொதுவாக இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்கிறார்.

    மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி

    மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி

    நான் அவரை ஒன்று கேட்கிறேன். மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினீர்கள். அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்புக்கு எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Minister Thangam Thennarasu asks Edappadi Palanisamy that how many people get employed in AIADMK regime?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X