சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி

Google Oneindia Tamil News

சென்னை: முகலிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் தெரியாமல் நிகழ்ந்துவிட்டது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

முகலிவாக்கம், சிட்லபாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்த உயிரிழப்புகள் நடந்துள்ளது. இதுகுறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

சிட்லபாக்கம் இளைஞர் சேது மின் கம்பம் விழுந்து உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செய்தி தவறானது. ஆனால்,இது வரை மின் கம்பம் சேதம் அடைந்ததாக புகார் வரவில்லை. அந்த வழியாக சென்ற லாரி இடித்து மின் கம்பம் விழுந்தது தான் உண்மை.

லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்

நடவடிக்கை

நடவடிக்கை

லாரி இடித்து மின்கம்பம் சேதம் அடைந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. மின்சார வாரியம் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மின்கம்பம் பழுதடைந்ததாக எந்த புகாரும் கிடையாது. காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்களை தேடி வருகிறோம்.

பள்ளம் தோண்டிய நிறுவனம்

பள்ளம் தோண்டிய நிறுவனம்

விரைவில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முகலிவாக்கம் விபத்து கூட எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டியதால் நிகழ்ந்தது. பள்ளம் தோண்டிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பருவமழை காலம்

பருவமழை காலம்

1912 புகார் எண்ணில் மின்துறை தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சரி செய்யுமாறு

சரி செய்யுமாறு

மின் துறை ஊழியர்கள் சேவைகளுக்கு பணம் கேட்டால் உடனடியாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தரமற்ற மின்கம்பங்கள் என்பதே கிடையாது. அனைத்து மின்கம்பங்களும் தரமாகவே உள்ளன. ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்தே மின்கம்பத்தை நடுகிறோம். சேதமடைந்த கம்பங்களை 10 நாட்களுக்குள் சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

English summary
Minister Thangamani says that Electricity Board is no responsible for Chitlapakkam and Mugalivakkam accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X