சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செந்தில் பாலாஜி அதிமுகவுக்கு வர முயன்றார்.. ஆனால்... அமைச்சர் பகீர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: செந்தில் பாலாஜி முதலில் அதிமுகவுக்குத்தான் வர முயன்றார். ஆனால் அதிமுக தலைமையோ அதை ஏற்க மறுத்துவிட்டது என்று அமைச்சர் தங்கமணி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்தபோது அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த செந்தில்பாலாஜி திடீரென ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து அவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா சீட்டு வழங்கவில்லை.

ஜெயலலிதா ஓரங்கட்டினாலும் சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார் செந்தில்பாலாஜி. இதையடுத்து சசிகலாவின் சிபாரிசின் பேரில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனுடன் இணைந்து செயல்பட்டார்.

3 மணி நேரத்தில் நடந்த களேபரம்.. மநீம - திமுக கூட்டணி வைரல்.. உண்மையில் என்னதான் நடந்தது? 3 மணி நேரத்தில் நடந்த களேபரம்.. மநீம - திமுக கூட்டணி வைரல்.. உண்மையில் என்னதான் நடந்தது?

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

இந்நிலையில் முதல்வருக்கு எதிராக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இந்நிலையில் தினகரனின் அமமுக கட்சியில் முக்கிய பதவி வகித்து வந்தார் செந்தில். எனினும் திடீரென அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார்.

தங்கமணி

தங்கமணி

இந்நிலையில் அவர் அதிமுகவுக்கு வரவிருந்தார் என அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இருந்துதான் அதிமுகவுக்கு வந்தார். மீண்டும் தற்போது திமுகவில் சேர்ந்துவிட்டார்.

பூசப்பட்ட தங்கம்

பூசப்பட்ட தங்கம்

திமுகவில் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார். பின்னர் அதிமுகவில் அவருக்கு என்னென்ன பதவிகளை ஜெயலலிதா கொடுத்து அழகு பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது திமுகவில் வெறும் உறுப்பினராகவே இருப்பார். அதுதான் திமுக அவருக்கு செய்யும் சிறப்பு. தினகரன் கூறியது போல் செந்தில் பாலாஜி மட்டும் முலாம் பூசப்பட்ட தங்கம் அல்ல. அனைவருமே தான்.

முதல்வர் கருத்து

முதல்வர் கருத்து

ஆனால் அதிமுகவினர் சொக்கத் தங்கங்கள். திமுக, மதிமுக, அதிமுக, அமமுக, மீண்டும் திமுக என செந்தில் பாலாஜி பல கட்சிகளுக்கு தாவியுள்ளார். டிடிவி தினகரனை தவிர்த்து மற்றவர்களை அதிமுகவில் இணைத்து கொள்ளலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

திமுகவுக்கே சென்ற செந்தில் பாலாஜி

திமுகவுக்கே சென்ற செந்தில் பாலாஜி

ஆனால் செந்தில் பாலாஜி திமுகவில் சேருவதற்கு முன்னர் அதிமுகவில் சேர முயற்சித்தார். எனினும் அவரை கட்சியில் சேர்த்து கொள்ள கட்சி தலைமை மறுத்துவிட்டது என்றார் தங்கமணி. அதிமுகவில் சேர்க்காததால்தான் அவர் மீண்டும் திமுகவுக்கே சென்றுவிட்டார்.

English summary
Minister Thangamani says that Senthil Balaji tries to return to ADMK. But Party head refused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X