சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொத்தம் 254.. டாக்டர், நர்சுகளுடன் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள்.. சென்னைக்கு சூப்பர் ஏற்பாடு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மேலும் 81 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.

Recommended Video

    தமிழக மருத்துவ நிபுணர் குழுவுக்கு முதல்வர் அழைப்பு.. என்னவாக இருக்கும்?

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது இந்த நிகழ்ச்சியின்போது, சென்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் பிரசில்லா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் விஜயபாஸ்கர்.

    பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழக அரசால், கூடுதலாக 2 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக இவர்கள் இன்று பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.

    3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா 3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா

    செவிலியர்கள் நியமனம்

    செவிலியர்கள் நியமனம்

    சென்னையிலுள்ள, 5 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனைகளிலும் இவர்கள் பணிக்குச் சேர உள்ளனர். ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் கூடுதலாக 400 செவிலியர்கள் இதன் மூலமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    தமிழகத்தில் அதிக பரிசோதனை

    தமிழகத்தில் அதிக பரிசோதனை

    மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளையும் உயர்த்துகிறோம். அதற்கு இணையாக மனித வளத்தையும் அதிகரிக்கிறோம். இதுவரை 6.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகமாக பாதித்துள்ள மகாராஷ்டிராவை விடவும், தமிழகத்தில் பரிசோதனைகள் அளவு அதிகம்.

    254 வாகனங்கள்

    254 வாகனங்கள்

    ஏற்கனவே, 173 நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் 81 வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 254 நடமாடும் வாகனங்கள் சென்னையில் உள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து இந்த கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் இருப்பார்கள். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த வாகனங்கள் சுற்றி வரும்.

    மருத்துவர்களுக்கு உரிய சிகிச்சை

    மருத்துவர்களுக்கு உரிய சிகிச்சை

    சென்னையில் மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருவதற்கு அரசின் மெத்தனம் காரணம் கிடையாது. தலை முதல் கால் வரையிலான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தால் கூட அதையும் மீறி சில மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    English summary
    Health Minister Vijaya Baskar inaugurated 81 new more corona test vehicles today in Chennai. Vijaya baskar told reporters, The Government of Tamil Nadu has appointed an additional 2,000 nurses. They have been hired today for a period of six months. They are working in five medical college hospitals in Chennai, hospitals in Kanchipuram, Tiruvallur and Chengalpattu. Already, 173 mobile medical vehicles are operating and 81 more vehicles have been introduced today. With this, 254 mobile vehicles are in Chennai. These additional vehicles have been brought in from other districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X