சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு வழியா விட்டாங்க.. ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல மணி நேரம் விசாரணை

ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இன்று ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ

    சென்னை: ஒருவழியாக 4-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா உறவினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சிகிச்சை அளித்த மருத்துவமனை என எல்லாரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது.

    எனினும் இதில் முக்கியமான சாட்சியாக உள்ளது விஜயபாஸ்கர்தான். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் டாக்டர் என்ற முறையிலும், விஜயபாஸ்கர் உடன் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த கருத்தை பல அமைச்சர்களும் ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தன

    3 முறை சம்மன்

    3 முறை சம்மன்

    அதனால் இது சம்பந்தமாக அமைச்சரிடம் விசாரிக்க இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி, ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வது மற்றும் அவருக்கு செய்த அறுவை சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனால் ஆணையத்தில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் 3 முறை சம்மன் அனுப்பி இருந்தது.

    4-வது முறை சம்மன்

    4-வது முறை சம்மன்

    ஒவ்வொரு முறையும் அமைச்சர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லாம் ஆஜராகாமலேயே இருந்தார். இதற்கான காரணமும் இதுவரை முறையாக சொல்லப்படவில்லை. இந்நிலையில் 4-வது முறையாக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதால், விஜயபாஸ்கர் இப்போது ஆஜராகி இருக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வம்

    ஓ.பன்னீர்செல்வம்

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்போதைய பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எல்லாம் தெரியும் என்று அறிக்கை விட்டவர்தான் விஜயபாஸ்கர்.

    கருத்து சொல்லவில்லை

    கருத்து சொல்லவில்லை

    அதுவும் இல்லாமல், "ஜெயலலிதாவை ஏன் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை, முறையான சிகிச்சை தந்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என்று அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி அளித்தபோதுகூட எதுவுமே கருத்து சொல்லாமல்தான் இருந்தார் விஜயபாஸ்கர்.

    பெரும் எதிர்பார்ப்பு

    பெரும் எதிர்பார்ப்பு

    இப்போது முதல்முறையாக ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் ஆணையத்தில் ஆஜராவது இதுவே முதல்முறை ஆகும். காலை 10 மணிக்கு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரிடம், ஜெயலலிதா சிகிச்சை சம்பந்தமான பல்வேறு கேள்விகள் சரமாரியாக எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    English summary
    Health Minister Vijayabaskar appeared before Arumugasamy investigationh committee today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X