சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு மருத்துவரின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. ஆவேசமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு மருத்துவரின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. விஜயபாஸ்கர்

    சென்னை: அரசு மருத்துவர்களுக்கு மாதம் ரூ 80 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் நிலையில் மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் கேட்கிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று மாலைக்குள் அவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களது பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டும் மழையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

    முருகா காப்பாத்து.. பழனி கோவிலுக்கு அடுத்தடுத்து சென்ற துர்கா ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்முருகா காப்பாத்து.. பழனி கோவிலுக்கு அடுத்தடுத்து சென்ற துர்கா ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்

    8 மருத்துவர்கள்

    8 மருத்துவர்கள்

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 மருத்துவர்களில் 4 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தன.

    30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை

    30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை

    இந்த போராட்டம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் கூறுகையில் அரசின் கோரிக்கையை ஏற்று 1550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ரூ 30 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

    3 ஆண்டுகள்

    3 ஆண்டுகள்

    ஆனால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு மருத்துவருக்கு ரூ 80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. பணியில் சேரும் மருத்துவர் மேல் படிப்பு படிக்கவும் அனுமதிக்கப்படுவதோடு 3 ஆண்டுகளுக்கும் அவருக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படுகிறது.

    பதவி உயர்வு

    பதவி உயர்வு

    மேல்படிப்பு படித்து முடித்துவிட்டு பணிக்கு மீண்டும் திரும்பும் மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை கேட்கிறார்கள் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    English summary
    Minister C.Vijayabaskar says that Government Doctors gets so many facilities, but they need pay equivalent to Central Government doctors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X