சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரிசோதனையில் "ஆக்ஸிலரேட்டரை" மிதிக்கும் தமிழகம்.. இன்று ஒரே நாளில் அதிகபட்ச சோதனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகம் எண்ணிக்கையிலான 6,109 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவை குணப்படுத்துவதில் தமிழகம் தான் நம்பர் 1

    தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக இருந்தது. அதுபோல் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்றைய கொரோனா நிலை குறித்த தகவல்களை அளிக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    மும்பையில் ஷாக்... 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு- தனிமைப்படுத்தப்பட்டனர்! மும்பையில் ஷாக்... 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு- தனிமைப்படுத்தப்பட்டனர்!

    பிசிஆர்

    பிசிஆர்

    அப்போது அவர் கூறுகையில் இன்று ஒரே நாளில் 6,109 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது பிசிஆர் கிட் சோதனையின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட சோதனைகளில் இன்று எடுக்கப்பட்டது மிகவும் அதிகம்.

    நல்ல விஷயம்

    நல்ல விஷயம்

    இதுவரை 41, 710 பேருக்கு பிசிஆர் கிட் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 6109 பேரில் வெறும் 43 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இது நல்ல விஷயமாக பார்க்க வேண்டும். நாங்கள் இன்னும் ரேண்டமாக சோதனை செய்யத் தொடங்கவில்லை.

    கொரோனா

    கொரோனா

    பிரைமரி கான்டாக்ட், டிராவல் ஹிஸ்டரி அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் கொரோனா வர வாய்ப்பிருக்கிறது என யூகிக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    ஆரோக்கியமான விஷயம்

    ஆரோக்கியமான விஷயம்

    தற்போது மகாராஷ்டிரம், டெல்லி ஆகிய மாநிலங்களில் அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் ரேண்டம் முறையில் கொரோனா சோதனை நடத்தப்பட்டால் மட்டுமே கொரோனாவின் சமூக பரவலை தடுக்க முடியும். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 200 பேருக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது 6000 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் கூட மேலும் சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதை நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    English summary
    Minister Vijayabaskar says about no of samples taken in a day. Today only 6 thousand samples taken today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X