சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூன்றே நிமிடங்களில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்திய 'ஏசாட்' ஏவுகணை.. எப்படி நடந்தது மிஷன் சக்தி?

Google Oneindia Tamil News

Recommended Video

    மிஷன் சக்தி சோதனை வெற்றி.. மோடி அதிரடி அறிவிப்பு-வீடியோ

    சென்னை: இந்திய விண்வெளி துறையில் இன்று இந்தியா மற்றொரு மைல்கல்லை தொட்டுள்ளது. குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் 300 கி.மீ தொலைவில் சுற்றிய செயற்கைக்கோளை தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மூலமாக (ASAT) மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா.

    இதுபோன்ற ஏவுகணை என்பது, காலக்கெடு முடிந்துபோன அல்லது செயல்படாத செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுவதாகும். நிறைய நாடுகள் இந்த வசதி தங்களிடம் இருப்பதாக சொல்லிக் கொண்டாலும், இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, வெளிப்படையாக இந்த சோதனையை நடத்தி வெற்றிப் பெற்றன.

    இந்த வரிசையில் தற்போது 4வது நாடாக இந்தியா சாதித்துள்ளது.

    விண்வெளித்துறையில் இந்தியா மாபெரும் சாதனை.. அது என்ன மிஷன் சக்தி? ஏன் நாட்டுக்கு முக்கியம்? விண்வெளித்துறையில் இந்தியா மாபெரும் சாதனை.. அது என்ன மிஷன் சக்தி? ஏன் நாட்டுக்கு முக்கியம்?

     அசத்திய அமெரிக்கா

    அசத்திய அமெரிக்கா

    ஏசாட் வகை ஏவுகணையை 1958ம் ஆண்டிலேயே, அமெரிக்கா சோதித்து பார்த்து வெற்றி கண்டது. ஐக்கிய சோவியத் ரஷ்யா 1964ம் ஆண்டு இந்த சோதனையை நடத்தியிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2007ல் சீனா இந்த சாதனையை செய்த நிலையில், 2019ல் இந்திய பாதுகாப்புத்துறையும், இந்த எலைட் க்ளப்பில் இந்தியா சேர உதவியுள்ளது.

    சீனாவின் உறுதி

    சீனாவின் உறுதி

    சீனா இதுபோன்ற சோதனையை செய்தபோது, பிற நாட்டு விண்வெளி பகுதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறி உலக நாடுகள் பலவும் விமர்சனங்களை முன் வைத்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்காது என சீனா உறுதியளித்தது.

    பிற நாடுகள் மேல் தாக்குதல் இல்லை

    பிற நாடுகள் மேல் தாக்குதல் இல்லை

    இப்போது இந்தியாவும், இது உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டுமே தவிர, பிற நாட்டு விண்வெளியிலோ, அவர்கள் செயற்கைக்கோள்களை அழிக்கவோ இதை பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உரையின் இறுதிப்பகுதியில், இதை அடிக்கோடிட்டுச் சொன்னார்.

    எதிர்கால நலன்

    எதிர்கால நலன்

    அதேநேரம், 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் ஆராய்ச்சி அமைப்பான, DRDO, வெளியிட்ட ஒரு அறிவிப்பில், எதிரிநாட்டு செயற்கைக்கோள்களை தாக்கியழிக்க கூடிய அளவுக்கு தேவைப்படும், தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்திருந்தது. தற்பாதுகாப்புக்கு என கூறினாலும், எதிர்காலத்தில் விண்வெளியில்தான் சண்டைகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால், இதுபோன்ற செயற்கைக்கோள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

    English summary
    What is ASAT the anti-satellite weapon? here we can find how Mission Shakti has ensured India a unique spot among countries with anti-satellite missiles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X