சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல!

அதிமுக தேர்தல் அறிக்கையில் இருந்த எழுத்து பிழை கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக, அதிமுக, பாமக தேர்தல் அறிக்கைகளில் என்ன ஒற்றுமைகள்

    சென்னை: "ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய்ட்டு தேர்தல் அறிக்கையில ஏன் போடணும்?" என்று நக்கலாக நெட்டிசன்கள் கேள்வி எழுந்துள்ளது.

    எழுத்துப்பிழை என்பது சகஜம்தான்.. ஆனால் அந்த எழுத்து பிழை எந்த விஷயத்தில், எங்கு நடைபெறுகிறது என்பதுதான் விஷயமே! அதிலும் ஆளும் வர்க்க தரப்பில் எது நடந்தாலும் அது வைரல்தான்!

    Mistake in ADMKs Election Manifesto

    அன்று நியூஸ் ஜெ சேனல் துவக்க நாளன்று துணை முதல்வர் பேசுவதை ஒளிபரப்பும்போது, "நாட்டை ஆளும் மன்னனின் "வால்" முனையைவிட பேனா முனை கூர்மையானது என்று பதிவிடப்பட்டது. ஒரு புது சேனல் துவங்குகிறது என்பதைவிட இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான் பரபரப்பாக பேசப்பட்டது.

    இப்படித்தான் நேற்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதிமுக நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இதில் பல்வேறு நல்ல நல்ல அம்சங்கள், திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், அந்த அறிக்கையின் முன் பக்கத்தில்பிழையுடன் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு! கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு!

    "Peace, Prosperity, progress" அமைதி, வளம், வளர்ச்சி என்பதற்கு பதிலாக, "Pease, Prosperity, progress" என தவறாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. Pease என்றால் பச்சை பட்டாணி, கடலை என்று பொருள். ஒரு அரசின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணியா? என்று பார்த்தவர்கள் குழம்பி விட்டனர். இது நம் நெட்டிசன்களின் கண்ணில் பட்டுவிட்டது. கேட்கணுமா என்ன... பச்சை பட்டாணியை போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள்!

    English summary
    There is a Spelling mistake in the ADMK's Election Manifesto "Pease"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X