சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 46 பூத்களில் தப்பு நடந்திருச்சு.. மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு: சத்ய பிரதா சாஹூ தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்தது என தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. வரும் 19ஆம் தேதி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது.

திருப்பரங்குன்றத்தில் வேட்பு மனு நிராகரிப்பு.. ஹைகோர்ட்டில் முறையிட்ட பாரதி கண்ணம்மா.. மனு தள்ளுபடி திருப்பரங்குன்றத்தில் வேட்பு மனு நிராகரிப்பு.. ஹைகோர்ட்டில் முறையிட்ட பாரதி கண்ணம்மா.. மனு தள்ளுபடி

பற்றாக்குறை

பற்றாக்குறை

இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் அடங்கும். 13 மாவட்டங்களில் ஈரோடு, தேனி மாவட்டங்களில் மட்டுமே மின்னணு இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

46 பூத்களில் தவறு

46 பூத்களில் தவறு

மாதிரி வாக்குப்பதிவின்போது சில மையங்களில் அதிகாரிகள் தவறு செய்தது தெரிய வந்தது. தேர்தலின்போது 46 வாக்குச்சாவடிகளில் நடந்த சில பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

மறுவாக்குப்பதிவு

மறுவாக்குப்பதிவு

இதனால் தேனி உள்பட 46 பூத்களில் தவறு நடந்ததாக வந்த தகவலால், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

உரிய விளக்கம்

உரிய விளக்கம்

ஏற்கனவே 10 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக திமுகவுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று கூறிய அவர், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ. 156 கோடியில் ரூ.144 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

English summary
Mistakes committed at 46 election booths in Tamil Nadu on polling said Tamil Nadu Chief election officer sathyapratha sahoo. He also said chances are there for reelection at 46 booths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X