"மிஸ்டர் எக்ஸ்" வருவார்.. வெறும் 3 நிமிஷம்தான்.. அண்ணாமலை மீட்டிங்கில்.. வார்னிங் கொடுத்த அமித் ஷா?
சென்னை: அண்ணாமலையை எந்த நம்பிக்கையில் தமிழ்நாடு பாஜக தலைவர் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் போலீஸ் அதிகாரி. அவர் என்ன நிரூபித்தார், அவர் கட்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றிய நபர்களை மதிக்கவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக அதிமுக இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை.
இந்த நிலையில்தான் சமீபத்தில் பேட்டி அளித்த அமித் ஷா, தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில்தான் அமித் ஷா இப்படி பேசி இருக்கிறார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு - டெல்லிக்கு இடையிலான உறவு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

பாஜக பலம்
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் வேறு கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்த பலர் மீண்டும் பழைய கட்சிக்கே திரும்பி சென்றுள்ளனர். கு. க செல்வம் போன்றவர்கள் மீண்டும் திமுகவிற்கு சென்றுவிட்டனர். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு சென்றுவிட்டார். அண்ணாமலைதான் பிரச்சனை என்றே வைத்துக்கொள்வோம். அண்ணாமலையை இவர்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அண்ணாமலை இல்லை என்றால் மிஸ்டர் எக்ஸ் ஒருவர் தலைவராக வரப்போகிறார். அது வரை காத்து இருக்கலாமே. மத்தியில் ஆளும் பாஜகவில் ஏன் இவர்களால் உறுப்பினர்களாக நீடிக்க முடியவில்லை.

பேட்டி
அண்ணாமலையை மாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஏன் இவர்களால் கட்சியில் இருக்க முடியவில்லை. பாஜகவில் அப்படி என்றால் எதோ பிரச்சனை என்றுதானே அர்த்தம். இதுதான் பாஜக வளர்ந்த விதமா? இதுதான் பாஜக வளர்ச்சியை காட்டுகிறது. அண்ணாமலை தன்னை கொள்கை வாதி என்கிறார். தன்னை வலிமையானவர் என்கிறார். வாய் சொல் வீரர் என்கிறார். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்கிறார். அப்படி என்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அண்ணாமலை சொன்னது போல ராஜினாமா செய்வாரா? அவர் ஒரு வார்த்தையில் இதற்கு உறுதியாக பதில் சொல்ல முடியுமா?

நம்பிக்கை
அண்ணாமலையை எந்த நம்பிக்கையில் தமிழ்நாடு பாஜக தலைவர் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் போலீஸ் அதிகாரி. அவர் என்ன நிரூபித்தார். இதனால்தான் பொன் ராதாகிருஷ்ணன் கூட உள்ளரங்க கூட்டத்தில் கோபமாக பேசினார். இந்த கட்சி தனது தொண்டர்களை, புதியவர்களை, கூட்டணி கட்சிகளை மதிக்கவில்லை. கட்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றிய நபர்களை மதிக்கவில்லை என்று பொன்னார் சொல்கிறார். பொன் ராதாகிருஷ்ணனே இப்படி சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்.

ஏன் இப்படி?
அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார். ஏன் அவர் மாற்றி மாற்றி பேசுகிறார். அவர் இப்படி வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார், என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நமது செய்தியாளர்.. டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை திடீரென எடப்பாடியை வாழ்த்துகிறார், கூட்டணி பற்றி டெல்லிதான் முடிவு எடுக்கும் என்றெல்லாம் கூறுகிறாரே. அப்படி என்றால் அண்ணாமலையை டெல்லி வார்னிங் கொடுத்து அனுப்பி உள்ளது என்று வைத்துக்கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

குபேந்திரன்
இதற்கு பதில் அளித்த குபேந்திரன், அமித் ஷாவை அண்ணாமலை வெறும் 3 நிமிடம்தான் சந்தித்தார் என்பதே எனக்கு கிடைத்த தகவல். அப்படி என்றால் அந்த நிமிடத்தில் என்ன நடந்து இருக்கும் என்று நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். இது உண்மை. பொய் கிடையாது. அப்படி என்றால் அண்ணாமலை எதுவும் பெரிதாக பேசவில்லை. அண்ணாமலை எதுவும் சொல்லவில்லை. அமித் ஷா இதை எல்லாம் கேட்டுக்கொள்ளவில்லை. அமித் ஷா நேற்று.. பாஜக வலிமையாக இல்லை, அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறினார். இதை செய்தியாளர்களிடம் டீசண்ட்டாக அமித் ஷா சொன்னார்.

அமித் ஷா சொன்னாரா?
இதையே கொஞ்சம் காட்டமாக அண்ணாமலையிடம் அமித் ஷா சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். அதிமுகவுடன்தான் கூட்டணி என்று அமித் ஷா சொல்லிவிட்டார். அப்படி இருக்க அண்ணாமலை என்ன செய்வார்? அண்ணாமலை எங்கே போவார்? அண்ணாமலை என்னும் கிளி என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலையை வைத்துக்கொண்டு கூட்டணியில் இருக்க முடியாது? அமர் பிரசாத் ரெட்டி நிர்வாகியாக இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று எடப்பாடி சொன்னால் என்ன செய்வார்கள்? அமர் பிரசாத் ரெட்டி எப்படி எடப்பாடியை அவமதிக்கலாம். இப்படி இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று எடப்பாடி கூறினால் அண்ணாமலை என்ன செய்வார், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications