சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி பேரன் அங்கே சேரவில்லை.. ஆனால் இங்கே வருகிறாராமே "துரை".. சூப்பர் செய்தி.. தொண்டர்கள் குஷி!

அழகிரி மகனுக்கு திமுகவில் புதிய பதவி தரப்படுவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு நல்ல செய்தி தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. முக அழகிரியின் மகனுக்கு திமுகவில் பொறுப்பு தரப்படுவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது!
தேர்தலுக்கு முன்னதாக, முக அழகிரி அரசியல் கட்சியைத் தொடங்கி பாஜகவுக்கு போகிறார், ரஜினி கட்சிக்குப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.. ஆனால் நான் கருணாநிதியின் மகன், பாஜகவுக்கு எல்லாம் செல்ல முடியாது என அழகிரி திட்டவட்டமாக சொல்லிவிட்டார் போலும்.

அதாவது, முக ஸ்டாலினுக்கு எதிராக பிளான்களை அழகிரி வைத்திருப்பாரே தவிர, பாஜகவில் நிச்சயம் சேரவே மாட்டார் என்று ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக சொன்னார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கூட்டணிக்கு பிடி கொடுக்கலை..திமுக தோற்றால் நாங்க பொறுப்பு அல்ல... அணுகுண்டை வீசும் தமிழக ஓவைசி கட்சிகூட்டணிக்கு பிடி கொடுக்கலை..திமுக தோற்றால் நாங்க பொறுப்பு அல்ல... அணுகுண்டை வீசும் தமிழக ஓவைசி கட்சி

 பாஜக

பாஜக

அதேபோல, அழகிரி ஒரு தனிக்கட்சி தொடங்க போவதாக தகவல் கசிந்தது.. அமித்ஷாவின் தமிழகம் வருகையின்போது, அழகிரியை அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது.. இந்த இரண்டு செய்திகளுமே ஒரே நேரத்தில் வெளியாகி தமிழகத்தை மிகுந்த பரபரப்பில் வைத்ததுடன், அதே வேகத்தில் மறைந்தும் விட்டன.

பதவி

பதவி

இந்த 2 செய்திகளுக்கு முன்பே மற்றொரு செய்தி கசிந்தது.. கடைசிவரை ரஜினியை போலவே, அழகிரியும் பாஜகவுக்கு பிடிகொடுக்காமலேயே இருந்து வரும்நிலையில்தான், பாஜகவின் கவனம் துரை அழகிரி மீது திரும்பி உள்ளதாகவும், அழகிரி மகனுக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்கப்போவதாக தகவல் வெளியானது.. அதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தரப்பு தொடங்கப்பட்டு, அந்த பேச்சுவார்த்தையும் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது என்றும், அநேகமாக இதில் தயாநிதி அழகிரிக்கு தென்மண்டல பொறுப்பு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால், இந்த தகவலும் புஸ்ஸென்று போய்விட்டது.

 சம்மதம்?

சம்மதம்?

அதற்கு பதிலாக வேறு ஒரு செய்தி கசிந்து வருகிறது.. அதாவது திமுகவில் சமரச பேச்சில் உடன்பாடு வந்துவிட்டதாம்.. துரைக்கு பதவி தர முன்வந்திருக்கிறதாம் திமுக.. மதுரையில் உள்ள அழகிரியிடம், திமுக மேலிடம், குடும்ப உறுப்பினர்கள் சிலர் மூலமாக, சமரசப் பேச்சு நடந்ததாகவும், அதில், தான் தயாநிதிக்கு பதவி தர சம்மதம் சொன்னதாகவும் தெரிகிறது.

பாஜக

பாஜக

குறிப்பாக திமுக மாணவர் அணிச் செயலர் பதவி வழங்க, முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், கடைசிவரை கருணாநிதியின் மகனும் சரி, பேரனும் சரி பாஜக பக்கம் செல்லவில்லை என்பது தெளிவாகி வந்தாலும், இவர்கள் தாய்க்கழகத்தில் இணைய போவதாக செய்திகள் பரவுவது திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையே தந்து வருகிறது!

English summary
MK Alagiris son is said to be given the main posting in the DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X