சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மு.க. அழகிரி கேட்கும் அட்லீஸ்ட் ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக?

Google Oneindia Tamil News

Recommended Video

    Union Minister MK Azhagiri against start new talks with DMK

    சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஓராண்டுக்குப் பின்னரும் திமுகவுக்குள் நுழைய முயற்சிக்கும் அழகிரியின் நடவடிக்கைகள் தொடருகிறது. தற்போது திமுகவில் ஸ்டாலினுக்கு நெருக்கடி தராத பதவியையாவது தாருங்கள் என அழகிரி தரப்பு பேசி வருகிறதாம்.

    ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் மகன் என்றும் பார்க்காமல் அழகிரியை கட்சியில் இருந்து தூக்கியடித்தார் கருணாநிதி. அவரது மறைவுக்குப் பின்னர் திமுகவுக்குள் எப்படியும் ஐக்கியமாவது என தீவிரம் காட்டினார் அழகிரி.

    ஆனால் ஸ்டாலின் தரப்பில் பலமாக முட்டுக்கட்டை போடப்பட்டது. அதேநேரத்தில் கருணாநிதி குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.

    தர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..!தர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..!

    நோ அறக்கட்டளை பதவி

    நோ அறக்கட்டளை பதவி

    முதலில் அழகிரி கேட்டது முரசொலி அறக்கட்டளைக்கு உதயநிதி இருப்பது போல திமுகவின் சொத்துகள் தொடர்பான அறக்கட்டளைக்கு அழகிரி மகன் துரைதயாநிதியை நியமிக்க வேண்டும் என்பதாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

    தென்மண்டல பதவி

    தென்மண்டல பதவி

    இதையடுத்தே தென்மண்டல பதவி உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஆனால் ஸ்டாலின் தரப்பு எதற்கும் பிடிகொடுக்கவே இல்லை. இதனால் திமுகவின் கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன என்பதை திட்டவட்டமாக தெரிந்து கொண்டு ரஜினிகாந்துடன் கை கோர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டது அழகிரி தரப்பு.

    மீண்டும் பேச்சுவார்த்தை

    மீண்டும் பேச்சுவார்த்தை

    தற்போது திடீரென மீண்டும் திமுகவில் பதவி பெறுவது தொடர்பாக அழகிரி தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறதாம். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியையாவது தமக்கு தந்தால் போதும் என்கிற நிலைப்பாட்டுக்கு இறங்கி வந்திருக்கிறாராம் அழகிரி.

    அழகிரி போடும் கணக்கு

    அழகிரி போடும் கணக்கு

    அப்படி தேர்தல் பணிக்குழு செயலாளராக தாம் நியமிக்கப்பட்டு திமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டால் தமது செல்வாக்கு கட்சியில் அமோகமாக உயர்ந்துவிடும் என்பதுதான் அழகிரியின் கணக்காம். இதற்கு மட்டும் ஸ்டாலின் தரப்பு ஒப்புக் கொள்ளுமா? என கண்சிமிட்டுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

    English summary
    Sources said that Former Union Minister MK Azhagiri against start new talks with DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X