சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதான் சொல்லுங்க.. சொந்த கட்சிக்கு மு.க.அழகிரி இப்படி செய்யலாமா?

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 30-ஆம் தேதி அவர் பதவியேற்க போகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் எல்லாம் வாழ்த்து மழை தூவி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சரும் கருணாநிதியின மகனுமான மு.க. அழகிரி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

என்ன அநியாயம் இது.. அந்த ஒரு பேச்சுதான் கனிமொழியின் அரசியலை மாற்றியது.. வெற்றி கைவசமான கதை! என்ன அநியாயம் இது.. அந்த ஒரு பேச்சுதான் கனிமொழியின் அரசியலை மாற்றியது.. வெற்றி கைவசமான கதை!

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அந்த கடிதத்தில் மக்களவை தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மீண்டும் பிரதமராவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்து செய்தி

வாழ்த்து செய்தி

நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எதிர்பார்க்கிறோம். அதை நிறைவேற்றுங்கள், எதிர்கால அரசியல் பணி சிறக்க வாழ்த்துகிறேன். அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்படுவீர்கள் என நம்புகிறேன் என வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்! ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!

திமுக தலைவர்

திமுக தலைவர்

மு.க அழகிரி திமுகவில் இருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர். அவரது மறைவுக்கு பின், எப்படியாவது அக்கட்சியில் நுழைந்துவிடலாம் என போராடினார் அழகிரி. ஆனால் அது நடைபெறவில்லை. திமுக தலைவர் பதவியை பெற துடித்தார். அதுவும் நடக்கவில்லை.

நொந்த ஆதரவாளர்கள்

நொந்த ஆதரவாளர்கள்

என்னதான் இருந்தாலும் மு.க.அழகிரி தான் பார்த்து வளர்ந்து பதவி சுகத்தை அனுபவித்த கட்சிக்கு ஒரு வாழ்த்துகூட சொல்லாமல் பாஜகவுக்கு வாழ்த்து சொல்லியிருக்காரே என அண்ணனின் அடிவிழுதுகளும் நொந்து கொள்கின்றனர்.

English summary
Ex Union Minister MK Azhagiri wishes Narendra Modi for winning again and became PM of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X