சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்தேகம் உங்கள் மீதே.. முகிலன் மாயமான விவகாரத்தில் அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர், முகிலன் மாயமான விஷயத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார், முகிலன். அப்போது, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். இதன்பிறகு, மதுரை செல்வதாக கூறிவிட்டு, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார். ஆனால், அவர் மதுரை வந்தடையவேயில்லை. ரயிலில் வைத்தே அவர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MK Stalin accuses Tamilnadu government for Mugilan missing

இந்த விஷயத்தில் முன்னணி அரசியல் தலைவர்கள் இதுவரை கருத்து கூறாமல் இருந்து வந்தனர். இப்போது மெல்ல மெல்ல ஆதரவு கிடைக்க தொடங்கியுள்ளது.

ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், "சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில்,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும்.அதுவரை சந்தேகம் உங்கள் மீதே!" என்று கூறியுள்ளார்.

English summary
Environmental activist S Mugilan is gone missing in Tamil Nadu, DMK chief MK Stalin accuses Tamilnadu government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X