• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நேற்று கலைஞர்.. நாளை ஸ்டாலின்.. அடுத்து உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்.. துரைமுருகன் கலகல!

|

சென்னை: என்னோடு தோழனாக இருந்தவர், இப்போது என் தலைவாகி இருக்கிறார். நேற்று கலைஞர் அமைச்சரவையிலும் இருந்தேன், நாளை முக ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன் அதற்கடுத்து உதயநிதி அமைச்சரவையில் இருப்பேன் என்று சென்னை கொளத்தூரில் முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில்; துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

அனைவரையும் அடிபணிய வைக்கும் பாஜகவால் இந்தியாவில் சிலரை மட்டும் எதிர்க்க முடியவில்லை. அதில் முக்கியமானவர் முக ஸ்டாலின் என்றும் திமுக பொது கூட்டத்தில்; துரைமுருகன் நேற்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.

10 கோடி விளம்பர பாக்கி.. கடுப்பான ஓபிஎஸ், இபிஎஸ்.. சீட் கிடைக்குமா.. கலக்கத்தில் நிர்வாகிகள் 10 கோடி விளம்பர பாக்கி.. கடுப்பான ஓபிஎஸ், இபிஎஸ்.. சீட் கிடைக்குமா.. கலக்கத்தில் நிர்வாகிகள்

இலட்சிய தலைவரின் எழுச்சி நாள் என்ற தலைப்பில் முக ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம் அருகே நடைபெற்றது
சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த பொது கூட்டத்தில திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், கழக உயர்நிலை செயல் திட்டகுழு உறுப்பினர் ஜெகத் ரட்ச்சகன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா

அப்போது பேசிய திமுக பொது செயலாளர் துரைமுருகன் ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் தமிழக முதல்வராக அமரப் போகிறார் அவருக்கு இந்த ஆண்டு கழகத்தலைவர் தளபதிக்கு பிறந்தநாள் அடுத்த ஆண்டு தமிழகத்தின் முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். இந்த பெருமை ஒரே நாளில் கிடைத்தது அல்ல மாற்றுக் கட்சியினரும் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இளம் வயதிலிருந்தே எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

தியாகம் செய்தவர்

தியாகம் செய்தவர்

தாய் தந்தை தடுத்தும் இரவு பகல் பாராமல் கழகப் பணியில் ஈடுபட்டவர் தியாகம் செய்வதிலும் யாருக்கும் இளைத்தவரல்ல. தலைவர் மகன் என்ற தனி சலுகை பெற்று தலைவராக வேண்டும் என்று முயற்சி எடுத்தவர் அல்ல ஸ்டாலின். தொண்டராக இருந்து அவர்களுடைய அன்பை பெற்று தலைவராக வேண்டும் என விரும்பி உழைத்தவர் தலைவர் ஸ்டாலின்.

அன்பைபெற்று தலைவரானார்

அன்பைபெற்று தலைவரானார்

என்னால் கூட ஸ்டாலின் அளவிற்கு சுற்று பயணம் செய்ய முடியவில்லை என புகழ்ந்தார் கருணாநிதி. தொண்டர்களின் அன்பை பெற்று தலைவரானவர். கொரோனா காலத்திலும் இயக்கத்தை இயங்குவதை சிந்தித்தார். ஒன்று படுவோம் வாருங்கள் என்றார்.

பாஜகவால் முடியவில்லை

பாஜகவால் முடியவில்லை

திமுக தலைவர் என்கிற நிலையில் இருந்து டெல்லியை அதிர வைத்திருக்கிறார். டெல்லி பயப்படுகிறது. இல்லையெனில் நேற்று அமித் ஷா திமுகவை இந்த அளவிற்கு விமர்சித்து இருக்க மாட்டார்கள். பாஜகவினர் நினைத்தால் பாராளுமன்றத்தை கூட்டு கிறார்கள். பாராளுமன்றம் அவர்களுக்கு பொழுதுபோக்கு மன்றமாகிவிட்டது. அனைவரையும் அடிபணிய வைக்கும் பாஜகவால் இந்தியாவில் சிலரை மட்டும் எதிர்க்க முடியவில்லை. அதில் முக்கியமானவர் முக ஸ்டாலின் எதிர்த்து கேட்கும் தைரியம் அவர் அப்பன் இடத்தில் பெற்றது.

அப்பாவைவிட அதிக தொகுதி

அப்பாவைவிட அதிக தொகுதி

போன முறை நம்மை யாரெல்லாம் எதிர்த்தார்களோ, அவர்கள் நம்மோடு இப்போது கூட்டணியில் உள்ளார்கள், அது தான் ஸ்டாலினின் சாமர்த்தியம். அப்பா 1971ல் பெற்றதை விட ஒரு தொகுதியாவது அதிகம் வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு ஸ்டாலின் செயல் படுகிறார்.

ஸ்டாலின் அமைச்சரவை

ஸ்டாலின் அமைச்சரவை

என்னோடு தோழனாக இருந்தவர், இப்போது என் தலைவாகி இருக்கிறார். நேற்று கலைஞர் அமைச்சரவையிலும் இருந்தேன், நாளை முக ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன் அதற்கடுத்து உதயநிதி அமைச்சரவையில் இருப்பேன்" இவ்வாறு துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

 
 
 
English summary
I was in the kalaingar's cabinet yesterday and I will be in Stalin's cabinet tomorrow and then in the Udayanithi cabinet: says duraimurugan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X