• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"வச்ச குறி".. சிக்கல் வராமல் தப்பிய திமுக.. ரெய்டுக்கு பின்னணியில் "அவரா".. பரபரப்பில் தமிழகம்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தரப்பினரிடையே நேற்று நடந்த ரெய்டானது திமுகவின் வெற்றிக்கு அபார காரணமாகிவிட்டது என்றும், இது பாஜகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் திமுகவே திணறி போய்விட்டது.. அந்த அளவுக்கு ரெய்டுகள் விறுவிறுவன நடந்து, தமிழ்நாடே பரபரப்பாகிவிட்டது. இதன் பின்னணி என்ன? இதன் தாக்கம் என்ன என்பது குறித்து நாம் ஒருசிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:

"அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன இது? விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தது சரி, ஆனால், ஓபிஎஸ் இபிஎஸ் சம்பந்தப்பட்ட இடங்களிலும் நடந்ததா? இவர்களது மகன்களும் பிசினஸ் செய்கிறார்களே? அங்கேயும் ஏன் போகவில்லை? ஸ்டாலின் ஒரு முதல்வர் வேட்பாளர் என்று தெரிந்தும் இப்படி ஒரு நடவடிக்கை தேவையா?

 கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

இப்படித்தான், ஜெயலலிதா இருந்தப்போ, 2016 தேர்தலில் அதிமுக 900 கோடி செலவு செய்ததாக, வருமான வரித்துறை கண்டுபிடித்தது.. அந்த முழு தகவல்களையும் ஆதாரத்தோடு மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தது. இதை ஒரு கவர் ஸ்டோரியாகவே தி-வீக் இங்கிலீஷ் பத்திரிகை வெளியிட்டது.. ஆனால், இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? ஒருவேளை அந்த தகவல் பொய் என்றால், அந்த பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? அல்லது அந்த செய்தி உண்மை என்றால் அதிமுக மீது நடவடிககை எடுத்திருக்க வேண்டும்? செய்தார்களா.. இல்லையே.. இப்போ மட்டும் என்ன திடீர்னு திமுக மீது குறி?

 ராஜாத்தி அம்மாள்

ராஜாத்தி அம்மாள்

இந்த பூச்சாண்டிக்கு யாரும் பயப்பட மாட்டாங்க.. மிசா காலத்திலேயே இதெல்லாம் பார்த்த திமுக இது.. அன்னைக்கு ராஜாத்தி அம்மா வீட்டில், ரெய்டு நடத்தினாங்க.. ஆனால் கலைஞர் கொஞ்சமும் அசரலையே... வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து உடன்பிறப்புகளுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருந்தார். இப்போ மட்டும் என்ன ஸ்டாலின் பயந்துட்டாரா என்ன?

 மன உறுதி

மன உறுதி

ரெய்டுன்னு கேள்விப்பட்டதும் ஆரம்பத்தில் கொஞ்சம் டென்ஷன் இருந்தது.. ஆனாலும் அவர் அவருடைய தேர்தல் வேலையை நேற்றெல்லாம் சரியாகத்தான் கவனித்து கொண்டிருந்தார்.. தொண்டர்களுக்கு வழக்கம்போல் பூஸ்ட் தந்து கொண்டிருந்தார். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்.. வெற்றி வாய்ப்பு உறுதி என்றும் தெரிந்துவிட்டது.. திமுகவுக்கு ஒரு கலக்கத்தையும், தொண்டர்களுக்கு ஒருவித சோர்வையும் தருவதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டது..

 நிதி போக்குவரத்து

நிதி போக்குவரத்து

இன்னொரு விஷயமும் சொல்லப்பட்டு வருகிறது.. திமுகவுக்கு எங்கெல்லாம் நிதி போக்குவரத்து இருக்கோ, அந்த இடங்களைதான் குறி வைத்திருக்கிறார்கள்.. அதாவது பசை உள்ள பார்ட்டிகள், திமுகவுக்கு பொருளாதார ரீதியாக உதவிடக் கூடாது என்பதுதான் இவர்கள் கணக்கு.. அதனால்தான், முக்கியமான தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு சார்பில் தகவல்களும் ஏற்கனவே வந்ததாகவும், இப்படி திமுகவுக்கு செல்லும் நிதி போக்குவரத்தை நிறுத்தினாலே அவங்க ஆஃப் ஆயிடுவாங்க என்ற ஒரு ஐடியா சொன்னதே அந்த மேலிடத்தில் உள்ள முக்கிய புள்ளிதான் என்றும் சொல்கிறார்கள்.

சபரீசன்

சபரீசன்

இதுவரை நடந்த ரெய்டு எடுத்து பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.. சபரீசன், மோகன் கார்த்திக், செந்தில்பாலாஜி, ஜெயமுருகன், எவ வேலு.. இவங்க எல்லாரும் நிதிவரத்து உள்ளவர்கள்.. கட்சியில் தாராளம் காட்டுபவர்கள்.. திமுகவுக்கு அபரிமிதமாக பணம் வரும் ரூட் எதுவென்று பார்த்து, அதை கட் செய்தாலே போதும் என்பதே இவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. இவ்ளோ கெடுபிடிகள், பரபரப்பை ஏற்படுத்தியும், ஏதாவது கண்டுபிடிச்சிருக்காங்களா? எடுத்திருக்காங்களா? இல்லையே..!

பாஜக

பாஜக

இதுவரை வந்த கருத்து கணிப்புப்படி பார்த்தால், பாஜக ஏற்கனவே பின்னடைவில் உள்ளது.. இப்படியெல்லாம் களேபரம் செய்தால், பாஜகவுக்கு ஓட்டு போடணும்னு நினைக்கிறவன்கூட ஓட்டு போடுவானா? ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது.. இந்த முறை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று தெரியும்.. ஆனால், அபார வெற்றிக்கு பாஜகவே காரணமாக அமைந்துவிட போவது கொஞ்சம் ஆச்சரியம்தான்!" என்றனர்.

English summary
MK Stalin and What was the background to the IT Raid on the DMK side
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X