சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல் அடித்த பகுதிகளுக்கு போகாமல்.. ஆட்டம் பாட்டம் எதற்கு.. முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "புயல் அடித்த பகுதிகளை ஆய்வு செய்யாமல் இப்படி சொந்த ஊரில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கான நேரம் இது கிடையாது" என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புயல் அடித்து 3 நாள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு மாவட்டமும் சீர் செய்யப்படாமல் உள்ளது. மக்கள் மாவட்டங்களில் தவித்து வருகிறார்கள்.

வெறும் நிதியுதவியை அளித்துவிட்டு, இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் போய் முதல்வர் பார்க்காமல் உள்ளார். இதற்காக நிறைய கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ஊருக்கு போறப்ப 2012 படம் மாதிரி இருந்தது.. கஜாவால் குலைந்த பட்டுக்கோட்டை! - பகீர் வீடியோ ஊருக்கு போறப்ப 2012 படம் மாதிரி இருந்தது.. கஜாவால் குலைந்த பட்டுக்கோட்டை! - பகீர் வீடியோ

ஓ.எஸ். மணியன்

ஓ.எஸ். மணியன்

அதேபோல அமைச்சர்கள் மீதும் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அவர்களை கண்டித்து சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை செய்து வருகிறார்கள். ஒருபடி மேலேபோய் தங்களை பார்க்க வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் மீது தங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் காட்டி விட்டார்கள்.

ஸ்டாலின் பாராட்டினார்

ஸ்டாலின் பாராட்டினார்

கஜா புயல் அடித்த அன்று, அதிமுகவின் அரசின் செயல்பாட்டினை முதலில் மனமுவந்து பாராட்டியது ஸ்டாலின்தான். ஆனால் தற்போது அதே ஸ்டாலின்தான் முதலமைச்சரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

50-பேர் பலி

50-பேர் பலி

அதில், "ரோம் நகரம் பற்றியெறிந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததாகச் சொல்வார்கள்'. நம்முடைய இதயமில்லாத முதலமைச்சர் எட்டிப்பார்க்காத பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான்.கோரப் புயல் பாதித்து 72 மணி நேரத்தை கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் முதலமைச்சர் சந்திக்கவில்லை. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இது நேரமில்லை

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை இழந்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரோ தன் சொந்த ஊரில் ஆட்டம், பாட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். கொண்டாட்டத்திற்கும், கேளிக்கைக்கும் இது நேரமில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்!" என காட்டமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
MK Stalin angry tweet CM Edapadi Palanisamy regarding Gaja Cyclone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X