• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஒரே அறிவிப்பில்.. மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்.. எடப்பாடியாரை ஓவர்டேக் செய்து.. சபாஷ்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே ஒரு அறிவிப்பை வெளியிட்டு, ஏழை மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளார் திமுக தலைவர்.. அதுமட்டுமல்ல, இந்த அறிவிப்பின் காரணமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே ஸ்டாலின் ஓவர்டேக் செய்துவிட்டார் என்றே சொல்லலாம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்த இயலாததால் அவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது. அது போல் 10ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன... இதனால் பள்ளி மாணவர்கள் மத்தியில் எடப்பாடியார் புகழ் உயர்ந்தது.

இதையடுத்து, கல்லூரிகளுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து செய்த நிலையில் அரியர் தேர்வு கட்டணங்களை செலுத்திய அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது..

 7.5.% இடஒதுக்கீடு

7.5.% இடஒதுக்கீடு

இதனால், "அரியர்களின் அரசனே, மாணவர்களின் மனித கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே" என போஸ்டர்களை ஒட்டி மாணவர்கள் முதல்வருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதற்கு பிறகு, மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றிய நிலையில், இந்த பெயரும் முதல்வர் எடப்பாடியாருக்கே சென்று வருகிறது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தரப்பில் பேசினாலும், "இந்த இடஒதுக்கீட்டை பெற்று தந்தது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. இது சம்பந்தமாக ஒரு கோரிக்கை கூட வைக்காமல் வாயைக்கிட்டு இருந்து விட்டு இப்போ நடிச்சிட்டு இருக்கார்" என்று அதிமுகவின் அமைச்சர்கள், எடப்பாடியாரை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார்கள்.

போராட்டம்

போராட்டம்

உண்மையிலேயே மாணவர்களின் பிரச்சனைகளுக்கு முதல் குரல் எழுப்பியதும், அவர்களுக்கான நலனை பதிவு செய்து வந்ததும், கோரிக்கைகளை முன் வைத்ததும், தேவைப்பட்டால் போராட்டங்களை நடத்தியும் தங்கள் நலனை வெளிப்படுத்தி வந்தது திமுகதான் என்பதையும் மறுக்க முடியாது.. ஒரு எதிர்க்கட்சியால் எந்த சட்டமும் இயற்ற முடியாது.. பேரவையை கூட்டி தீர்மானமும் இயற்ற முடியாது.. அதிகாரப்பூர்வமான அரசு அறிவிப்புகளையும் வெளியிட முடியாது.. இப்படிப்பட்ட நிலையில், அதிகபட்சமாக செய்ய முடிந்தது மாணவர் நலன் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வைப்பதும், இடித்துரைப்பதும், எடுத்துரைப்பதும்தான்.. அதைதான் திமுக செய்தது.

எடப்பாடியார்

எடப்பாடியார்

எனினும், மாணவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா அறிவிப்பின் புகழும் எடப்பாடியார் பக்கமே சென்று வரும் நிலையில், ஒரு விஷயத்தில் முதல்முறையாக எடப்பாடியாரை ஓவர்டேக் செய்துள்ளார் ஸ்டாலின்.. ஆம்... இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 நீட் தேர்வு

நீட் தேர்வு

அதுமட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற திமுக ஆட்சியில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப்பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.

 கல்வி கட்டணம்

கல்வி கட்டணம்

உண்மையை சொல்லப்போனால், உண்மையிலேயே இதுவும் அதிரடிதான்... டாக்டருக்கு படிப்பதற்கான செலவை ஏழை மாணவர்களால் முழுதும் செய்ய முடியாத நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை செலுத்தபோவதாக சொல்லி, ஏழை மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார் திமுக தலைவர்..

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

அதுமட்டுமல்ல, திமுக எப்போதுமே தமிழக மாணவர்கள் கல்வியில் அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகவும் உள்ளது. இருந்தாலும், இந்த வருடம் மட்டும் மாணவர்களுக்கு திமுக பணம் கட்டிவிட்டால், வரப்போகும் 4 வருடங்களுக்கும் அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்? படிப்பை பாதியிலும் விட முடியாத சூழல் வருமே போன்ற சந்தேகங்களும் எழுகிறது..

 ஓவர்டேக்

ஓவர்டேக்

இதுகுறித்து திமுக தரப்பில் பேசினாலும், "இந்த இடஒதுக்கீட்டை பெற்று தந்தது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. இது சம்பந்தமாக ஒரு கோரிக்கை கூட வைக்காமல் இருந்து விட்டு இப்போ நடிச்சிட்டு இருக்கார்" என்று அதிமுகவின் அமைச்சர்கள், எடப்பாடியாரை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார்கள்.

எது எப்படியோ மாணவர்களின் நலனுக்காக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் இப்படி போட்டா போட்டி போடுவது சந்தோஷமான விஷயம்தான்.. பலனடையப் போவது அரசு பள்ளி மாணவர்கள் என்பதால்.

எது எப்படியோ மாணவர்களின் நலனுக்காக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் இப்படி போட்டா போட்டி போடுவது சந்தோஷமான விஷயம்தான்.. பலனடையப் போது அரசு பள்ளி மாணவர்கள் என்பதால்.

English summary
MK Stalin announces that DMK will pay Government School students fees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X