சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால், நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து.. திமுக தேர்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Manifesto List: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை - முழுவிவரம்

    சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திமுக - காங்கிரஸ் கூட்டணி இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. இந்த நிலையில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    MK Stalin announces that Neet exam will be cancelled

    இதன் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும். அதோடு மாணவர்களின் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்றார்.

    கல்வி கடன் ரத்து.. நீட் தேர்வு ரத்து.. 7 பேர் விடுதலை.. இதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி லிஸ்ட்!கல்வி கடன் ரத்து.. நீட் தேர்வு ரத்து.. 7 பேர் விடுதலை.. இதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி லிஸ்ட்!

    நீட் எனும் நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவம் பயில சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தை படிக்கும் தமிழக மாணவர்கள் கடும் அவதியில் உள்ளனர்.

    இந்த நீட் தேர்வினால் மருத்துவ கனவில் இருந்த அரியலூர் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து எத்தனை எத்தனையோ தற்கொலைகள் நடந்துள்ளன. ஆனால் அதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.

    மாநில அரசும் உரிய முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாணவர்களின் மனதில் பாலை வார்க்கும் விதமாக ஸ்டாலினின் அறிவிப்பு உள்ளது.

    English summary
    DMK President MK Stalin announces that Neet exams will be cancelled if FMK- Congress win in Loksabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X