சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனியாவது மின் கட்டண விவகாரத்தில் கருணை காட்ட வேண்டும்- தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திமுகவினர் போராட்டத்துக்குப் பின்னராவது மின்கட்டணத்தை குறையுங்கள்; மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

MK Stalin appeals to TN Govt on EB bill row

கொரோனா நோய்த் தொற்று ஒரு பக்கம் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அரசு மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கொள்ளை நோய்க் காலத்தில் மக்களைக் காக்கத் தவறிய மாநில அரசு, மின் கட்டணம் என்ற பெயரால் அநியாயக் கொள்ளை நடத்திக் கொண்டு இருக்கிறது.

இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருவாயும் இல்லை. அதை மனதில் வைத்து மின்கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசு மின் கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி, தன் பங்குக்கு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.

இதனைக் கேள்வி கேட்டால், மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று பச்சைப் பொய்யை அறிக்கையாக வெளியிடுகிறார் மின் துறை அமைச்சர் தங்கமணி. பொதுமக்கள், மின் கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டு, அதனால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அமைச்சர் பார்க்கவில்லையா? பார்த்து விட்டு மழுப்பிக் கொண்டு இருக்கிறாரா?

MK Stalin appeals to TN Govt on EB bill row

இத்தகைய மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று காலையில் கண்டன முழக்கம் எழுப்பிக் கண்டித்தோம். கறுப்புக் கொடி தாங்கி தமிழக அரசுக்கு எதிர்ப்பைக் காட்டினோம். திமுக-வினர் மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கெடுத்தார்கள்.

இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு

இதன் பிறகாவது மின் கட்டணத்தை ஒழுங்கு படுத்துங்கள். குறையுங்கள்; சலுகை காட்டுங்கள்; மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு

English summary
DMK President MK Stalin has appealed to TamilNadu Govt on EB Bill row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X