சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின் கட்டணத்தில் சலுகை... மற்ற மாநிலங்களால் முடியும் போது தமிழகத்தில் ஏன் முடியாது -மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மின் கட்டணச் சலுகை வழங்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் அது முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின் கட்டணம் என்ற பெயரில் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது? என ஸ்டாலின் வினவியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது;

உங்கள் வீட்டு மின் கணக்கீட்டு முறையில் சந்தேகமா.. மின் வாரியம் முக்கிய அறிவிப்புஉங்கள் வீட்டு மின் கணக்கீட்டு முறையில் சந்தேகமா.. மின் வாரியம் முக்கிய அறிவிப்பு

மக்கள் அதிர்ச்சி

மக்கள் அதிர்ச்சி

''ஒருபக்கம் கொரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கொரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது''.

நாடு எந்த நிலைமையில்?

நாடு எந்த நிலைமையில்?

''இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை; உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை. கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வரும் போது ஊரடங்கைத் தளர்த்தினார்கள்; மதுக்கடைகளைத் திறந்தார்கள்; பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை''!

பணப்புழக்கம்

பணப்புழக்கம்

''மின்கட்டணம் செலுத்துவதற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30-ம் தேதிவரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அரசு நிகழ்காலத்தில் செயல்பட வேண்டும். அரசின் அலட்சியப் போக்கால் இன்று பிற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும்தான் போடப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைவரும்தான் வாழ்வியல் இழந்து தவித்து வருகின்றனர். ஜூலை 30-ம் தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?''

ரீடிங் எடுத்தது தவறு

ரீடிங் எடுத்தது தவறு

''ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள். சில உதாரணங்களை மட்டும் காட்டுகிறேன்.சிலருடைய மின்கட்டண அட்டைகள் என்னிடம் இருக்கிறது (எடுத்துக்காட்டு காணொலி பதிவு) எவ்வளவு அநியாயமாக கட்டணங்கள் உயர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா? ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், அரசாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா? "நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகி இருக்கும்" என்று சொல்கிறார்கள்''.

அபராதத் தொகையா?

அபராதத் தொகையா?

''வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது? இல்லையென்றால், தண்டனையா? வீட்டில் இருந்தது தவறா? மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதைப் பொறுத்து கூடும் குறையும். இது மக்களுக்கும் தெரியும். ஆனால், இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது''.

அரசு தான் காரணம்

அரசு தான் காரணம்

''இது எல்லாவற்றிற்கும் பழனிசாமியின் ஆட்சிதான் காரணம். முதல் நாளிலிருந்து சரிவர நோய்த்தொற்றைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் உங்களுக்குள் அரசியல் செய்துகொண்டு முன்னுக்குப் பின் முரணாக உத்தரவுகளை மாற்றிக் கொண்டே வருகிறீர்கள். பின்னர், "மக்கள் பொறுப்பாக இல்லை. வெளியில் சுற்றுகிறார்கள்" என்று அவர்கள் மேலே பழியைப் போட்டீர்கள். இப்போது மறுபடியும் மக்கள் வீட்டில் இருந்தார்கள் என்று குற்றம் சொல்கிறீர்கள்''.

பெரிய பளு

பெரிய பளு

''எப்போதுதான் ஆட்சியாளர்களிடம் தெளிவு வருமோ என்று தெரியவில்லை? "தவறான அடிப்படையில் மின்சார ரீடிங் எடுத்திருக்கிறார்கள்" என்று மக்கள் சொல்கிறார்கள். இரண்டு மாதத்துக்குச் சேர்த்து எடுக்கும்போது ஸ்லாப் மாறும். ஸ்லாப் மாறினால் கட்டணமும் எகிறும். இது மின்சார வாரியத்துக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பளு என்பது சாதாரண மக்களைக் கேட்டால் தான் தெரியும்''.

அநியாய கட்டணம்!

அநியாய கட்டணம்!

''சாதாரண நேரம் இல்லை இது; கொரோனா காலம்! எல்லா விதத்திலும் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். இதில் பழனிசாமி அரசாங்கமும் தன் பங்குக்கு மக்களை வதைக்கிறது. மின்சாரம் என்பது மக்களது மிக மிக அவசியத்தேவை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தான் மின்சார வாரியமே இயங்குகிறது. நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என்று மின்சாரச் சட்டத்திலேயே இருக்கிறது. இப்போது பழனிச்சாமி அரசாங்கம் விதித்த கட்டணம் நியாயமான கட்டணம் அல்ல; அநியாயமான கட்டணம்!''

மின் கட்டணச் சலுகை

மின் கட்டணச் சலுகை

சரியாக சொல்லவேண்டும் என்றால், இந்த மாதிரியான பேரழிவு காலத்தில்தான் மக்களுக்கு தங்களால் முடிந்த சலுகையாக கட்டணச் சலுகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஆனால் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் கட்டணச் சலுகை கொடுத்து இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த மாநில அரசுகளால் முடிகிறது; தமிழக அரசால் ஏன் முடியவில்லை?

எது உண்மை?

எது உண்மை?

''பணம் இல்லையா? நிதி நிலைமை சரியில்லையா? கஜானா காலியாக இருக்கிறதா?எது உண்மை? அதைச் சொல்லுங்கள்! நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்றால், மக்களுக்குச் சலுகை தருவதற்கு மனமில்லையா? மக்களைக் காப்பாற்றுவது தானே அரசு!இதுவரை நாங்கள் சொன்ன மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த ஆலோசனைகளையும் கேட்கவில்லை.ஏனென்றால், மக்களைக் காப்பாற்றும் உண்மையான எண்ணம் இல்லை.''

இவ்வாறு ஸ்டாலின் தனது காணொலி பதிவில் கூறியுள்ளார்.

English summary
mk stalin asks, tn govt why not offer a discount on eb bill
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X