சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா..தமிழக அரசு துரித நடவடிக்கை.. ஆளுநருடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.

அரசுக்கு நிதியுதவி குவிகிறது.. தமிழகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி கொரோனா நிதி! அரசுக்கு நிதியுதவி குவிகிறது.. தமிழகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி கொரோனா நிதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்து விட்டது. உயிரிழப்பும் 250-ஐ தாண்டி விட்டது.

தமிழகத்தில் ஊரடங்கு

தமிழகத்தில் ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கை

தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக உலகளாவிய டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. சென்னையில் வார் ரூம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முதல்வர் ஆலோசனை

முதல்வர் ஆலோசனை

கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.2,000-ஐ தமிழக அரசு வழங்கி வருகிறது. கொரோனா தடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஸ்டாலின் விளக்கினார்

ஸ்டாலின் விளக்கினார்

இந்த நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். சென்னை கிண்டி ராஜ்பவனில் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகள் குறிதது எடுத்துரைத்தார். அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் ஸ்டாலினுடன் உடன் இருந்தனர்.

English summary
Chief Minister MK Stalin briefed Governor Banwarilal Purohit on the corona prevention measures and curfew being taken in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X